More
Read more!
Categories: Cinema History Cinema News latest news

எம்.எஸ்.வி வேண்டாம் என ஒதுக்கிய பாடல்! கே.வி.எம்-மை வைத்து ஹிட் கொடுத்த வாலி

தமிழ் சினிமாவில் ஒரு வாலிபக் கவிஞராக வலம் வந்தவர் கவிஞர் வாலி. எம்ஜிஆர் காலத்தில் இருந்து தனுஷ் வரைக்கும் அனைத்து நடிகர்களுக்கும் தன்னுடைய பாடல் வரிகளால் புத்துயிர் கொடுத்தவர். இவருடைய வரிகளில் காதல் அலைபாயும்.

தமிழ் சுரக்கும். தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற கவிஞராகவும் பாடல் ஆசிரியராகவும் திகழ்ந்து வந்தார் வாலி .எளிய தமிழ் சொற்களை பாடல்களில் அமைத்து எல்லோருக்கும் மிகவும் எளிதாக புரியும் வகையில் கவிதை நயத்துடன் வெளிப்படுத்தியவர்.

Advertising
Advertising

ஸ்ரீரங்கத்தில் பிறந்து வளர்ந்த வாலியை டி எம் சௌந்தரராஜன் சினிமாவிற்குள் பாட்டு எழுத சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். அழகர் மலைக்கள்ளன் என்ற திரைப்படத்தில் தன்னுடைய முதல் பாடலை எழுதினார் வாலி.

vaali1

எம்ஜிஆரின் பெரும்பாலான பாடல்களில் அவருடைய அரசியல் பிரவேசத்தை தன் பாடல் வரிகளின் மூலம் அற்புதமாக வெளிப்படுத்தி காட்டியவர். இந்த நிலையில் எம்ஜிஆரின் ஒரு பாடலுக்கு வாலி பல்லவிப்போட அதை எம் எஸ் வி மறுத்திருக்கிறார். அதாவது” புத்தம் புதிய புத்தகமே உன்னை புரட்டிப் பார்க்கும் புலவன் நான்” என்ற அந்த பல்லவியை எம் எஸ் வி இடம் படித்துக் காட்டி இருக்கிறார் வாலி.

ஆனால் எம் எஸ் வி அதைக் கேட்டுவிட்டு இந்த பல்லவி மிகவும் பெரிதாக இருக்கிறது. அதை இன்னும் கொஞ்சம் சிறிதாக மாற்றிக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என கூறினாராம். ஆனால் வாலிக்கோ இந்த பல்லவியை மாற்ற எண்ணம் இல்லையாம்.உடனே எம்ஜிஆரின் இன்னொரு படமான அரசன் கட்டளை என்ற படத்தில் கே வி மகாதேவன் இசையமைத்துக் கொண்டு இருந்தாராம் .

அவரிடம் இந்த பல்லவியை போட்டுக்காட்டி இருக்கிறார் வாலி. மேலும் இந்த பல்லவிக்கு ஏற்றபடி ஒரு டியூன் போட்டு காட்டுங்கள் என சொல்லி இருக்கிறார் வாலி. அதேபோல் கேவி மகாதேவனும் போட்டுக்காட்ட இதை அந்த படத்தில் இணைத்துக்கொண்டாராம் வாலி. அந்தப் பாடலும் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்திருக்கிறது.

Published by
Rohini

Recent Posts