அந்தப் படம் ஹிட் ஆனதே என்னாலதான்!.. அதிக சம்பளம் கேட்டேன்.. வாலி சொன்ன ரகசியம்
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 10000 பாடல்களுக்கும் மேல் எழுதி வாலிபக் கவிஞராக இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் கவிஞர் வாலி. இவரை பற்றி தமிழ்நாட்டில் தெரியாதவர்களே இல்லை என்றுதான் கூற வேண்டும். வாலியின் பல பாடல்கள் கண்ணதாசனை ஒத்ததாகவே இருக்கும் என அந்தக் காலத்தில் கூறுவார்கள்.
ஆனால் வாலி இதை பற்றி ஒரு போதும் கவலைப்பட்டது இல்லை. ஏனெனில் தங்கத்தோடுதானே ஒப்பிடுகிறார்கள், தகரத்தோடு இல்லையே என்று கூறுவார் வாலி. மேலும் வாலிக்கும் கண்ணதாசனுக்கும் இருந்த நெருக்கத்தை ஒரு சம்பவம் மூலம் அறியலாம். அதாவது கற்பகம் படத்தில் வாலி எழுதியிருந்த பக்கத்து வீட்டு பருவமச்சான் என்ற பாடலை பார்த்த கண்ணதாசன் வாலியை தன்னுடைய கலையுலக வாரிசு என்று கூறினாராம். இதன் மூலம் இருவருக்கும் உள்ள அந்த நட்பை அறியலாம்.
மேலும் எம்ஜிஆரின் பல படங்களுக்கு பாடல்களை எழுதியவர் வாலி. எம்ஜிஆரின் பல கொள்கை பாடல்களை கொடுத்தவரும் வாலிதான். அதே போல் அரசியலில் எம்ஜிஆர் ஆதிக்கம் செலுத்தினாலும் அதை தன் பாடல்கள் மூலம் மிகவும் ஆணித்தரமாக மக்களுக்கு எடுத்துரைத்தவரும் வாலிதான்.
மேலும் இளையராஜாவிற்கு அதிக பாடல்களை தந்ததும் வாலி தானாம். ஒரு சமயத்தில் கண்ணதாசனின் மறைவு மற்றும் வைரமுத்துவுடன் கருத்து வேறுபாடு என இளையராஜா இருக்கும் போது அவருக்கு உதவிக்கரம் நீட்டியவராக வாலி இருந்தார் என்றும் சில செய்திகள் குறிப்பிடுகின்றது.
இந்த நிலையில் வாலியின் ஒரு பேட்டி வைரலாகி வருகின்றது. இயக்குனர் வெங்கட் பிரபு வாலியிடம் வந்து ஒரு படம் பண்ணப் போகிறேன், நீங்கள் தான் பாட்டெழுதி தரவேண்டும் என கேட்டாராம். உடனே வாலி வெங்கட் பிரபுவிடம் படத்திற்கு என்ன பெயர் என்று கேட்டாராம். அதற்கு ‘எங்க ஏரியா உள்ளே வராதே’ என்று சொல்லியிருக்கிறார். அதற்கு வாலி இப்படி பெயர் வைத்தால் யாரும் படத்தை வாங்க வரமாட்டாங்க என அந்தப் படத்திற்கு ‘சென்னை 28 ’ என்ற பெயரை மாற்றி வைத்திருக்கிறார் வாலி.
அதனாலேயே அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது என்றும் கூறினார். மேலும் வெங்கட் பிரபுவை மிகவும் காஸ்ட்லியான இயக்குனர் என்றும் கூறினார். ஏனெனில் நான் கேட்ட அதிக சம்பளத்தை கொடுக்க தயாராக இருந்தாரே? அதனால் தான் வெங்கட் பிரபுவை காஸ்ட்லியான இயக்குனர் என்று சொன்னேன் என்றும் அந்த பேட்டியில் கூறினார்.
இதையும் படிங்க :மாதவன் என்னை பழிவாங்கிட்டான்… பிரபல இயக்குனரிடம் அவமானப்பட்ட கெளதம் மேனன்..! என்னவா இருக்கும்!..