“இனி உனக்கு பாட்டெழுத மாட்டேன்”… ஷங்கரின் முகத்துக்கு நேராகவே கொந்தளித்த வாலி… என்னவா இருக்கும்??
தமிழின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர், “ஜென்டில் மேன்” என்ற திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். 1993 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது.
அர்ஜூன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில் ஆகிய பலரின் நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தை கே.டி.குஞ்சுமோன் தயாரித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் வேற லெவலில் ஹிட் ஆனது. குறிப்பாக “சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே”, “ஒட்டகத்தை கட்டிக்கோ”, “உசிலம்பட்டி பெண்குட்டி” போன்ற பாடல்கள் காலத்துக்கும் ரசிக்கப்படும் பாடல்களாக அமைந்தன. இதில் “சிக்குபுக்கு சிக்குபுக்கு” பாடலை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.
இந்த நிலையில் வாலி மறைவதற்கு பல வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு விழாவில் இயக்குனர் ஷங்கருடன் சண்டை போட்ட சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார்.
அதில் “ஜென்டில் மேன் திரைப்படத்தின் எல்லா பாடல்களையும் நான்தான் எழுதியிருக்க வேண்டும். அந்த சிக்கு புக்கு ரயிலே பாடலை ஷங்கர் வேண்டாம் என்று சொன்னார். இந்த பாடல் மிகப்பெரிய ஹிட் அடிக்கும் என கூறினேன்.
அதற்கு ஷங்கர், சிக்கு புக்குன்னு வார்த்தை எல்லாம் இருக்கே என்றார். ரயில்வே ஸ்டேஷனில் பாடுவதுதானே இப்பாடல், அதனால்தான் இந்த வரியை வைத்தேன் என்றேன். இது வேண்டாம் வேறு பாடலை எழுதிக்கொடுங்கள் என ஷங்கர் கூறினார். நானும் வேறு ஒரு பாடலை எழுதிக்கொடுத்துவிட்டேன்.
இதையும் படிங்க: ஷாருக்கானையே கடுப்பேத்திய அட்லி… “இனிமே இப்படி பண்ணாதீங்க”… கண்டிஷன் போட்ட தயாரிப்பாளர்…
ஒரு நாள் ஸ்டூடியோவிற்கு சென்றபோது சிக்கு புக்கு ரயிலே பாடலுக்கு இசையமைத்துக்கொண்டிருந்தனர். இந்த பாடலைத்தான் வேண்டாம் என்று கூறினாரே, எதற்கு இப்போது இந்த பாடலை உருவாக்கிக்கொண்டிருக்கிறார் என்று தோன்றியது. உடனே ஷங்கரிடம் இனிமேல் அவர் படத்தில் பாடல் எழுதமாட்டேன் என கோபத்தோடு கூறினேன். ஆனால் அதன் பின்னும் அவர் என் மேல் அன்பு காட்டி வந்தார்” என கூறியிருந்தார்.
எனினும் “ஜென்டில் மேன்” திரைப்படத்திற்கு பிறகு ஷங்கர் இயக்கிய பல திரைப்படங்களில் பல ஹிட் பாடல்களை வாலி எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.