வாய்ப்பில்லாமல் பரிதவிச்ச வாலி!..ஒரே ஒரு சிகரெட் தான்!..ஒட்டுமொத்த வாழ்க்கையையும் மாற்றிய சம்பவம்!..

by Rohini |   ( Updated:2022-11-06 05:05:00  )
vaali_main_cine
X

கவிஞர் வாலியின் வரியில் பசுமையான பாடல்களை இன்று வரை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் வர் சினிமாவிற்குள் வருவதற்கு சந்தித்த பிரச்சினைகள் இருக்கே அதை சொல்லிமாலாது. எம்.எஸ்.வி யே இவரின் பாடல் வரிகளை பார்த்து இதென்ன வரிகள்? சுமாராக தான் இருக்கிறது. சொந்த ஊருக்கு போய் படிக்க சொல் என்று விரட்டிய சம்பவம் கூட வாலியின் வாழ்க்கையில் நடந்திருக்கிறது. அந்த சமயத்தில் வாலிக்கு உதவியவர் நடிகர் வி.கோபாலகிருஷ்ணன் மற்றும் உதவி இயக்குனராக இருந்த சீனிவாசராவ் ஆகிய இருவரும்.

vaali1_cine

சரி சொந்த ஊருக்கே போய்விடலாம் என எண்ணிய வாலியை தேடி சீனிவாசராவ் ஒரு புதிய படத்தில் வாய்ப்பு வந்திருக்கிறது என அவரை அழைத்துக் கொண்டு போனாராம். அங்கே இசையமைப்பாளர் கோபாலன் அமர்ந்திருக்க அவரிடம் வாலியை சீனிவாசராவ் ‘இவர் தான் மிகப்பெரிய கவிஞர்’ என சொல்லி அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவர் அப்படி சொன்னதும் வாலி சீனிவாச ராவை ஏற இறங்க பார்க்க உடனே ‘என்ன வாலி சார்! நீங்க என்ன சிகரெட் குடிப்பீர்கள்’என சீனிவாச ராவ் கேட்டதும் வாலிக்கு குபீர் என ஆகிவிட்டது.

vaali2_cine

ஏனெனில் முதல் வாய்ப்பு, அதுவும் ஒரு இசையமைப்பாளர் முன்னாடி இவர் இப்படி கேட்டதும் வந்த வாய்ப்பும் போய்விடும் என எண்ணியிருக்கிறார் வாலி. அத்தோடு விடாமல் சீனிவாசராவ் ஒரு வேலைக்கார பையனை அழைத்து சீகரெட் வாங்கும் படி அனுப்பி அதை வாலியிடம் கொடுத்து ‘இந்தாங்க வாலி சார்,சும்மா இழுத்துவிட்டே வரிகளை எழுதுங்கள்’ என்று கூற அவரும் சில வரிகளை எழுதியிருக்கிறார். அது கோபாலனுக்கும் பிடித்து போக ரெக்கார்டிங்கிற்கு நாளைக்கு வாரும் என சொல்லிட்டாராம்.

vaali3_cine

வீட்டுக்கு வாலி சீனிவாசராவுடன் வந்து கொண்டிருக்கும் போது நடந்ததை பற்றி கேட்டாராம் வாலி. அதற்கு சீனிவாசராவ் ‘அந்த இசையமைப்பாளருக்கு தமிழ் கவிஞர்களை பற்றி அவ்வளவாக தெரியாது. சும்மா பந்தாவுக்கு தான் சிகரெட் எல்லாம் கொடுத்து எழுது சொன்னேன், நீங்க மட்டும் புதுசு என தெரிந்தால் வாய்ப்பு கொடுத்திருக்க மாட்டார்’ என கூறினார் சீனிவாசராவ். இவர் இப்படி சொன்னதும் ஆனந்ததில் கண்ணீர் வடித்தாராம் வாலி.

Next Story