எம்.ஜி.ஆர் பாடலால் வாலிக்கு வந்த கடிதம்… பின்னாளில் கவிஞரின் வாழ்க்கையையே மாற்றிய தரமான சம்பவம்!!
வாலிப கவிஞர்
தமிழ் சினிமாவின் வாலிப கவிஞர் என்று போற்றப்பட்ட வாலி, எம்.ஜி.ஆருக்கு பல பிரபலமான பாடல்களை எழுதியுள்ளார். அவ்வாறு வாலி எழுதிய பாடல்களில் “குமரிப் பெண்ணின் உள்ளத்திலே” என்ற பாடலும் ஒன்று. இப்பாடல் “எங்க வீட்டுப் பிள்ளை” திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலாகும். இப்பாடல் எம்.ஜி.ஆரின் காதல் பாடல்களில் மிகவும் ரசிக்கத்தக்க பாடலாகும்.
வாலிக்கு வந்த கடிதம்
இப்பாடல் வெளிவந்தபோது மெகா ஹிட் ஆகியது. இப்பாடல் வெளிவந்த சமயத்தில் ஒரு பெண் ரசிகை வாலிக்கு தினமும் கடிதங்கள் எழுதி வந்தாராம். அந்த கடிதத்தில், “நான் மைலாப்பூரைச் சேர்ந்த பெண், நான் உங்களை சந்திக்க வேண்டும்” என எழுதியிருந்ததாம். பல நாட்களாக அந்த கடிதம் வாலிக்கு வந்துகொண்டே இருந்ததாம். தினமும் அந்த கடிதத்தில் “உங்களை சந்திக்க வேண்டும்” என்றே எழுதியிருக்குமாம்.
இதனை தொடர்ந்து ஒரு நாள் வாலி அந்த பெண்ணுக்கு பதில் கடிதம் ஒன்றை எழுதினாராம். அதில், “நாளை என்னை நீங்கள் சந்திக்க வரலாம்” என்று எழுதினாராம். அதற்கு அடுத்த நாள் அந்த கடிதத்தை கையில் வைத்திருந்தவாறு அந்த பெண் வாலியை பார்க்க வந்தாராம். அதன் பின் அடிக்கடி இருவரும் சந்தித்துக்கொண்டார்களாம்.
காதல் திருமணம்
சில நாட்களில் அவர்கள் மிகவும் நட்போடு பழகத் தொடங்கினர். அதனை தொடர்ந்து அந்த நட்பு காதலாகி மாறியது. அதன் பின் வாலி அந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அந்த பெண்ணின் பெயர் ரமணி திலகம். இவ்வாறு தன்னுடைய ரசிகையையே காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார் வாலி.
இதையும் படிங்க: தேடி வந்த பத்மபூசன்… வேண்டாம் என்று திரும்பிக்கொண்ட எஸ்.ஜானகி…