அந்த விஷயத்தில் எம்.எஸ்.விக்கு பிறகு தேவாதான்!.. இப்படி பாராட்டிட்டாரே வாலி!...

by சிவா |   ( Updated:2023-05-18 07:55:32  )
deva
X

deva

திரைத்துறையில் எம்.ஜி.ஆர் காலம் முதல் அஜித் காலம் வரை பலருக்கும் பாடல்களை எழுதியவர் கவிஞர் வாலி. காலத்திற்கு ஏற்றார்போல் பாடல்களை எழுதுவதால் இவரை வாலிப கவிஞர் வாலி என்றே திரையுலகினர் அழைத்தனர். எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் பல நூறு பாடல்களை வாலி எழுதியுள்ளார். பல காதல் மற்றும் தத்துவ பாடல்களை எழுதியிருக்கிறார். அதேபோல், ரஜினி, கமலுக்கும் பல நூறு பாடல்களை எழுதியர் வாலி.

vali

vali

ஒரு படத்திற்கு பாடல் என்பது இரண்டு முறையில் உருவாகும். அந்த காட்சிக்கான சூழ்நிலையை இயக்குனர் இசையமைப்பாளரிடம் விவரிப்பார். அதுக்கேற்றது போல இசையமைப்பாளர் மெட்டுக்களை போடுவார். அதில், எது பிடித்திருக்கிறதோ அதை இயக்குனர் தேர்வு செய்வார். அதன்பின் அந்த மெட்டுக்கு பாடலாசிரியரை வரவழைத்து பாடலை எழுத சொல்வார்கள். அதன்பின் அந்த பாடலை பாடகர்கள் பாட ஒலிப்பதிவு செய்யப்படும்.

மற்றொரு முறை என்பது ஏற்கனவே கவிஞர்கள் எழுதிய கவிதை அல்லது பாடல்களை அப்படியே பாடலில் பயன்படுத்துவார்கள். அதாவது அந்த வரிகளுக்கு ஏற்ப இசையமைப்பாளர் ஒரு மெட்டை போடுவார். திரையுலகில் இப்படியும் பல பாடல்கள் உருவாகியிருக்கிறது.

vaali

இந்நிலையில், ஒரு மேடையில் இசையமைப்பாளர் தேவாவை பற்றி பேசிய வாலி ‘நான் எழுதிய சில நாடகங்களுக்கு தேவா இசையமைத்துள்ளார். பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்தவர். அவரை போல வெற்றியை பார்த்தவர்கள் யாருமில்லை. தேவாவின் இசையில் 500 பாடல்களுக்கும் மேல் நான் எழுதியிருக்கிறேன். தமிழை நன்றாக ரசிப்பார். பாட்டு எழுதி கொடுத்தால் அதற்கு மெட்டு போடும் தகுதி எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு பின் தேவாவுக்கு மட்டுமே உண்டு’ என பேசியிருந்தார்.

இளையராஜாவை வாலி குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story