எம்.ஜி.ஆர் முன்னிலையிலேயே உணர்ச்சி பெருக்கில் சிவாஜியை புகழ்ந்த வாலி… அடுத்து நடந்ததுதான் சம்பவமே!!
எம்.ஜி.ஆரின் பெருந்தன்மையை குறித்து சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். அதே போல் தனது போட்டி நடிகரான சிவாஜி கணேசனுடன் மிகவும் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். சிவாஜியை தனது சொந்த தம்பியாகவே நினைத்தார் எம்.ஜி.ஆர். இந்த நிலையில் தனது உணர்ச்சி பெருக்கில் திடீரென எம்.ஜி.ஆர் முன்னிலையிலேயே சிவாஜியை புகழ்ந்திருக்கிறார் கவிஞர் வாலி. அப்போது எம்.ஜி.ஆர் என்ன சொன்னார் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
ஒரு முறை சிவாஜி கணேசனின் திரைப்படத்தையோ அல்லது அவர் நடித்த நாடகத்தையோ கவிஞர் வாலியும் எம்.ஜி.ஆரும் பார்த்துக்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் சிவாஜியின் அபார நடிப்பை பார்த்து உணர்ச்சிவசப்பட்ட வாலி, எம்.ஜி.ஆரிடம், “சிவாஜி மாதிரி ஒரு நடிகனே இல்லைன்னு நான் சொல்றேன். நீங்க என்ன சொல்றீங்க?” என கேட்டாராம்.
இந்த கேள்வியை கேட்ட பிறகு வாலி, தான் உணர்ச்சி வசப்பட்டு இப்படி சிவாஜியை குறித்து புகழ்ந்துவிட்டோமே எம்.ஜி.ஆர் என்ன சொல்லப்போறாரோ? என நினைத்தாராம். ஆனால் எம்.ஜி.ஆரோ, “ஆமா ஆமா, சிவாஜி மிகப் பிரமாதமான நடிகர்தான். சிவாஜிக்கு இணையா இன்னொருத்தரை சொல்ல முடியாது என்றாலும் சிவாஜிக்கு அடுத்தபடியாக முத்துராமன் ஒரு நல்ல நடிகர்” என கூறினாராம். எம்.ஜி.ஆர் தான் கூறியதை ஆமோதித்து பேசியதால் வாலிக்கு ஆச்சரியமாக இருந்ததாம்.
அக்காலகட்டத்தில் எம்.ஜி.ஆருக்கு போட்டி நடிகராக சிவாஜி கணேசன் திகழ்ந்திருந்தாலும் சிவாஜி ஒரு சிறந்த நடிகர் என்பதை எந்த வித ஈகோவும் இல்லாமல் ஒப்புக்கொண்டது வியப்பை அளிக்கிறது.
இதையும் படிங்க: எல்லா மொழிகளிலும் கலக்கிய கன்னடத்துப் பைங்கிளி.. மலையாள சினிமாவை மட்டும் வெறுத்தது ஏன்னு தெரியுமா?..