“ரஜினிக்கு நான் பாட்டெழுதுனேன்... ஆனா அது அவருக்கே தெரியாது”... வருத்தத்தை பகிர்ந்து கொண்ட வாலி…
வாலிப கவிஞர் என்று அழைக்கப்படும் வாலி, தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக விளங்கியவர். எம்.ஜி.ஆர் தொடங்கி மிர்ச்சி சிவா வரை கிட்டத்தட்ட 4 தலைமுறையினரின் டாப் நடிகர்களுக்கு பாடல் எழுதிய பெருமைக்கு சொந்தக்காரர்.
எப்போதும் காலத்திற்கு ஏற்றார் போல் தன்னை அப்டேட் செய்துகொள்பவர் வாலி. அதனால்தான் அவரால் ஒவ்வொரு தலைமுறையினருக்கு ஏற்றார்போல் பாடல்கள் எழுதமுடிந்தது.
இந்த நிலையில் தனது மறைவிற்கு முன்பு வாலி குஷ்புவுடன் பங்குபெற்ற ஒரு பேட்டியில் மிகவும் வருந்தத்தக்க விஷயம் ஒன்றை குறித்து பகிர்ந்துகொண்டார்.
“ஒவ்வொரு ஹீரோக்களுக்கும் தங்களது இமேஜ்ஜை உயர்த்தி பேசுவது போல் பாடல்கள் அமையவேண்டும் என நினைப்பார்கள். நீங்கள் பாடல்கள் எழுதும்போது ஹீரோக்களை மனதில் வைத்துக்கொண்டு எழுதுவீர்களா?” என குஷ்பு கேட்டார்.
அதற்கு பதிலளித்த வாலி “இதை சொல்வதற்கு நான் வருந்துகிறேன். இப்போதுள்ள ஹீரோக்களுக்கு பாடல்களின் மேல் அக்கறையே இல்லை. ஹீரோக்களுக்கு இமேஜ்ஜை கூட்டுவது போன்ற பாடல்களை நானும் இசையமைப்பாளரும் இணைந்துதான் எழுதுகிறோம்.
இதையும் படிங்க: “சின்ன கேரக்டர்தான் எனக்காக பண்ணுங்க”… வேண்டுகோள் விடுத்த விஜயகாந்த்… கண்ணீரில் தத்தளித்த ஜூனியர் நடிகர்…
ஒரு முறை ரஜினியிடம் அவருக்காக எழுதிய பாடல்களை குறித்து பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர் ‘இதெல்லாம் நீங்கள் எழுதியதா?’ என்று கேட்டார்” என கூறியிருந்தார்.
மேலும் பேசிய அவர் “சிவாஜி கணேசனுக்கு நான் பாடல்கள் எழுதும்போது, அப்பாடல்களை கேட்பதற்கு சிவாஜி வந்து உட்கார்ந்துவிடுவார். ஆனால் இப்போதுள்ள நடிகர்கள் யாரும் வருவதில்லை. அதற்கு ஒரு முக்கிய காரணம் என்னவென்றால், இப்போதுள்ள இசையமைப்பாளர்கள் நடு இரவில்தான் ரெக்கார்டிங் செய்கிறார்கள்.
நானே கூட இப்போதெல்லாம் ரெக்கார்ட்டிங்கிற்கு போவதில்லை. யுவன் ஷங்கர் ராஜாவை பார்த்து பத்து வருடங்கள் ஆகிறது. ஆனால் அவரது பல பாடல்களை நான் எழுதியுள்ளேன்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.