More
Categories: Cinema History Cinema News latest news

வாலி சொன்ன ஒரு வார்த்தை!.. பாரதிராஜா வாழ்க்கையில் அப்படியே பலித்த அந்த சம்பவம்!..

தமிழ் சினிமாவில் பதினாறு வயதினிலே திரைப்படம் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா. கிராமம் சார்ந்த படங்களை இயக்கி கிராமத்து மக்களின் காதல், கோபம், வன்மம், வாழ்க்கை முறை என அனைத்தையும் திரையில் பிரதிபலித்தவர் இவர். குறிப்பாக ஸ்டுடியோவில் மட்டுமே இயங்கிக்கொண்டிருந்த சினிமாவை வயல்வெளிக்கு அழைத்து சென்றவர்.

பாரதிராஜாவின் எண்ட்ரி தமிழ் சினிமா உலகையே அசைத்து போட்டது. ஏனெனில், அதற்கு போல அதுபோன்ற இயலபான படங்கள் வெளிவரவில்லை. பெரும்பாலும், நாடக பாணியில்தான் சினிமா உருவாகி வந்த காலம் அது. பாரதிராஜாதான் சாதாரண மக்கள் எப்படி பேசுவார்களோ அவர்களின் மொழியை திரையில் காட்டினார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: நீங்க என்ன பெரிய புலவரா? வாலியிடம் கடுப்பான நாகேஷ்.. அப்படி என்ன பிரச்சனை தெரியுமா?

அதன்பின்னரே அவரை போல சிலர் படமெடுக்க வந்தனர். மண்வாசனை, கிழக்கே போகும் ரயில், கடலோர கவிதைகள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, கருத்தம்மா, கிழக்கு சீமையிலே என சினிமாவின் முக்கிய படங்களை இயக்கியவர் பாரதிராஜா. இவரிடம் உதவியாளராக பணிபுரிந்தவர்கள்தான் பின்னாளின் சினிமாவை ஆண்டனர். இப்போது 83 வயதாகிவிட்டாலும் சினிமா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, சினிமாவில் நடிப்பது என ஆக்டிவாக வலம் வருகிறார்.

1960 முதல் பல வருடங்கள் தமிழ் சினிமாவில் பாடல்களை எழுதியவர் கவிஞர் வாலி. 4 தலைமுறைகளுக்கு பாடல்களை எழுதி வாலிப கவிஞர் என ரசிகர்களால் அழைக்கப்பட்டவர். எம்.ஜி.ஆருக்கு இவர் ஏராளமான பாடல்களை எழுதியவர். எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த பாடலாசிரியராகவும் வாலி இருந்தார்.

இதையும் படிங்க: சிவாஜியை கலாய்த்து பாடல் எழுதிய வாலி!.. கோபத்தின் உச்சிக்கே போன எம்.ஜி.ஆர்..

அவருக்குபின் ரஜினி, கமல், விஜய், அஜித் என எல்லோருக்கும் பாடல்களை எழுதியுள்ளார். ஒரு விழாவில் பேசிய வாலி ‘சில விஷயங்கள் நான் சொன்னால் பலித்துவிடும். ஒருமுறை பாரதிராஜா என்னிடம் வசன பேப்பரை வாங்குவதற்காக என் வீட்டிற்கு வந்தார்.

அவருக்கு நான் எழுதிய கவிதை புத்தகம் ஒன்றை கொடுத்து ‘இன்னும் ஒரு வருடத்தில் நீ இயக்குனராக இருப்பாய்’ என சொன்னேன். அடுத்த வருடத்தில் பதினாறு வயதினிலே படத்தை இயக்கினார். தமிழில் ஒரு சொல் வெல்லும். ஒரு சொல் கொல்லும்’ என வாலி பேசியிருந்தார்.

இதையும் படிங்க: சிகரெட் புகையை இசையமைப்பாளர் முகத்தில் ஊதிய வாலி!.. முதல் பாட்டு எழுதும்போதே இப்படியா?..

 

Published by
சிவா