இந்த கதாபாத்திரத்தில் நடித்தது வாலியின் மனைவியா?. அதுவும் ஜெய்சங்கர் நடித்த கதையில்.. இது தெரியாம போச்சே!..
தமிழ் சினிமாவில் காலங்காலமாக பின்பற்றி வந்த பழக்கமுறையை தற்காலத்திற்கு ஏற்ப மாற்றிய பெருமை நடிகர் ஜெய்சங்கரையே சேரும். அண்ணே,அண்ணே என்று அழைத்து வந்தவர்களை ஹாய் சொல்லும் முறைக்கு மாற்றி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியவர் தான் ஜெய்சங்கர்.
நல்ல படிப்பு, நல்ல குடும்பம் இப்படி இருந்தாலும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற தீராத ஆசையால் நாடகக் கம்பெனியில் சேர்ந்து தன் நடிப்பு திறமையை காட்டிக் கொண்டிருந்தார் ஜெய்சங்கர். சினிமாவில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 10 வருடங்கள் முடிசூடா கதாநாயகனாக இவரை உயர்த்தியது.
வாராவாரம் ஒரு படம் என்று வெள்ளிக்கிழமைகளில் ஜெய்சங்கரின் படம் ரிலீஸ் ஆகும். அதனாலேயே வெள்ளிக் கிழமை நாயகன் என்ற பெயரும் பெற்றார். மேலும் தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் என்றும் அழைக்கப்பட்டார். ஏனெனில் இவர் நடிக்கும் பெரும்பாலான படங்களில் துப்பறியும் கதாபாத்திரங்களிலேயே நடித்துக் கொண்டிருந்தார்.
அந்த கதாபாத்திரங்களும் ஜெய்சங்கருக்கு கச்சிதமாக பொருந்தி இருந்தது. அதனாலேயே அப்படி அழைக்கப்பட்டார். இவர் கல்லூரி காலத்தில் இருந்தே நடிகர் சோவும் ஜெய்சங்கரும் நண்பர்களாக இருந்தார்கள். அந்த சமயத்தில் நடிகர் சோ விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் என்ற பெயரில் ஒரு நாடகக் கம்பெனியை நடத்திக் கொண்டிருந்தார். அதில் ஜெய்சங்கரும் இணைந்தார்.
இதையும் படிங்க : ஒருத்தருக்கொருத்தர் இப்படி முட்டிக்கிட்டா என்னதான் பண்றது?? எம்.ஜி.ஆர். படத்தில் பிரபலங்களுக்குள் நடந்த களேபரங்கள்…
அந்த நாடகக் கம்பெனி மூலம் தயாரிக்கப்படும் பெரும்பாலான நாடகங்களில் நடிகர் சோவே பிரதான கதாபாத்திரத்தில் நடிப்பாராம். அதர்கு அடுத்த கதாபாத்திரத்தில் சோவின் தம்பி நடிக்க மீதமுள்ள கதாபாத்திரத்தில் தான் மற்ற நடிகர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமாம். இதனாலேயே அந்த நாடகக் கம்பெனியில் இருந்து வெளியேறினார் ஜெய்சங்கர்.
அதன் பிறகு கூத்தபிரான் நாடகக்குழுவில் சேர்ந்திருக்கிறார். அந்த நாடகக் கம்பெனி மூலம் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார் ஜெய்சங்கர். அதனை தொடர்ந்து ‘தேவை ஒரு தங்கை’ என்ற நாடகத்தில் கதாநாயகனாக நடித்தாராம். இந்த நாடகத்தை வாலி பார்க்க வேண்டும் என ஜெய்சங்கர் ஆசைப்பட ஜெய்சங்கரின் நண்பர் ஒருவர் மூலம் வாலியை அழைக்க சென்றனராம்.
வாலியும் நாடகம் பார்க்க வருவதற்கு ஒப்புக் கொண்டு நாடகத்தை பார்த்தாராம். ஆனால் அந்த சமயத்தில் வாலிக்கு தெரிந்திருக்காது.இந்த நாடகத்தில் நடித்த ஒரு நடிகை தான் பின்னாளில் தனக்கு மனைவியாக வருவாள் என்று. ஆம் ‘தேவை ஒரு தங்கை’ நாடகத்தில் ஜெய்சங்கருக்கு தங்கையாக நடித்த ரமண திலகம் தான் கவிஞர் வாலியின் மனைவியாம். இந்த உண்மையை காலம் கடந்து சொன்னவர் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன்.