காத்திருந்த ஏவி மெய்யப்ப செட்டியார்!.. ஜாலியாக சரக்கடித்து கொண்டிருந்த வாலி!.. ஆனாலும் எழுதினாரு சூப்பர் பாட்டு!...

தமிழ் சினிமாவில் 1960 முதல் 2013 வரை பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியவர் கவிஞர் வாலி. சினிமாவில் பாட்டெழுதும் ஆசையில் சொந்த ஊரிலிருந்து சென்னை வந்து வாய்ப்பு தேடியவர். வாலி வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்தபோது கண்ணதாசன் பீக்கில் இருந்தார். சில வருடங்களில் சில பாடல்களை மட்டுமே வாலி எழுதியிருந்தார். அதன்பின் ஒருவழியாக வாய்ப்புகளை பெற்று, எம்.ஜி.ஆர் படங்களில் பாடல்கல் எழுத துவங்கி பிரபலமானார்.

எம்.ஜி.ஆருக்கு பல காதல் மற்றும் சோக, தத்துவ பாடல்களை வாலி எழுதியுள்ளார். எம்.ஜி.ஆர் என்றால் பொதுவாக எல்லோருக்கும் என்னென்ன பாடல்கள் நினைவுக்கு வருமோ அதில் 70 சதவீதம் எழுதியவர் வாலிதான். எம்.ஜி.ஆர் நடிப்பில் 1964ம் வருடம் வெளிவந்த தெய்வத்தாய் படத்திலும் வாலி பாடல்கள் எழுதியிருந்தார். அந்த பாடல்களை கேட்ட ஏவி மெய்யப்ப செட்டியார் ஏவிஎம் நிறுவனம் அப்போது தயாரித்து வந்த ‘சர்வர் சுந்தரம்’ படத்திற்கு வாலியை பாடல் எழுத வைக்கலாம் என நினைத்தார்.

இதையும் படிங்க: அந்த இடத்தை பார்த்தா ஹார்ட் பீட் எகிறுது!… வாலிப பசங்க மனச கெடுக்கும் பிரக்யா…

பொதுவாக வாலி எம்.எஸ்.விஸ்வநாதனை தொடர்பு கொண்டு இன்றைக்கு எனக்கு எதாவது பாடல் இருக்கிறதா என கேட்பார். இருக்கிறது என சொன்னால் சொன்ன நேரத்திற்கு போய் பாடலை எழுதிகொடுத்து வந்துவிடுவார். ஒருநாள் அப்படி கேட்டபோது ‘இன்று உங்களுக்கு பாடல் இல்லை. கண்ணதாசன்தான் வருகிறார்’ என எம்.எஸ்.வி. சொல்லவே, வாலி வீட்டில் ஜாலியாக மது அருந்த துவங்கிவிட்டாராம்.

Vaali

Vaali

ஆனால், திடீரென ஏவி மெய்யப்ப செட்டியார் அங்கு வந்து ‘வாலியை கூப்பிடுங்கள். அவர் பாடல் எழுதட்டும்’ என சொல்ல தொலைப்பேசியில் வாலிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால், அப்போது அவர் மது அருந்திகொண்டிருந்தார். நீண்ட நேரம் ஆகியும் வாலி வரவில்லை. என்ன ஆனது என புரியாமல் இருந்த எம்.எஸ்.வி அங்கிருந்த ஒருவரை அனுப்பி வாலியை அழைத்துவர சொல்ல, சென்றவரும் வாலியோடு மது அருந்த துவங்கிவிட்டாராம். மெய்யப்ப செட்டியரோ காத்திருக்கிறார். பதறிப்போன எம்.எஸ்.வி மீண்டும் வேறு ஒருவரை அனுப்பி பார்த்துவிட்டு வர சொல்ல அவர் அங்கு சென்று கூறிய பிறகுதான் மெய்யப்ப செட்டியார் காத்திருப்பதே வாலிக்கு நினைக்கு வந்ததாம்.

avalukkenna

உடனே எழுந்து குளித்துவிட்டு, திருநீர் எல்லாம் பூசிகொண்டு அங்கு சென்றுள்ளார். அப்படி அவர் எழுதிய பாடல்தான் ‘அவளுக்கென்ன அழகிய முகம்’ ஆகும். சூப்பர் ரொமாண்டிக் மூடோடு இந்த பாடலை எம்.எஸ்.வி இசையமைத்திருப்பார். இந்த பாடலுக்கு நாகேஷ் ரசிக்கும்படி அவரின் ஸ்டைலில் நடனமாடியிருப்பார். இந்த பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

இதுபற்றி ஒருமுறை பேசிய வாலி ‘நான் மது அருந்தி சென்றதை மெய்யப்ப செட்டியார் கண்டுபிடித்துவிட்டார். ஆனாலும், என் மீது கோபப்படாமல் அதன்பி ஏவிஎம் தயாரித்த பல படங்களில் பாட்டெழுதும் வாய்ப்பை எனக்கு கொடுத்தார்’ என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரஜினிக்காக உதவி செய்யப் போய் மாட்டிக் கொண்ட கமல்! பட ரிலீஸ் சமயத்தில் நடந்த சோகம்

 

Related Articles

Next Story