வாலி எழுதிய பாடலை தவறாக பாடிய எஸ்.பி.பி?... ஆனால் அங்கதான் ஒரு டிவிஸ்டு… இப்படியா பல்பு கொடுக்குறது!
வாலிபக் கவிஞர் என்று போற்றப்படும் வாலி, தமிழ் இசை உலகில் பல பிரபலமான பாடல்களை எழுதியுள்ளார். அதில் இப்போதும் ரசிகர்கள் ரசிக்கக்கூடிய பாடலில் ஒன்றாக இருக்குறது “கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே” என்ற பாடல்.
காலத்தை தாண்டியும் ரசிக்கப்படும் பாடல்கள்
இப்பாடல் இடம்பெற்ற திரைப்படம் “புது புது அர்த்தங்கள்”. இத்திரைப்படத்தை கே.பாலச்சந்தர் இயக்கியிருந்தார். இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தையும் எழுதியவர் வாலி.
இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. “கல்யாண மாலை”, “கேளடி கண்மணி”, “குருவாயூரப்பா” ஆகிய பாடல்கள் காலத்தை தாண்டியும் ரசிக்கப்பட்டு வருகிறது.
சபாஷ் வாலி
இந்த நிலையில் “கல்யாண மாலை” பாடலை குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலில் “நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி செஞ்சம் என்னும் வீணை பாடுமே தோடி” என்று ஒரு வரி வரும். அதில் “நெஞ்சம் என்னும் வீணை பாடுமே தோடி” என்று வாலி எழுதியிருந்ததைத்தான் எஸ்.பி.பாலசுப்ரமணியம் “செஞ்சம்” என்று தவறாக பாடிவிட்டார் என பலரும் கூறிவருகின்றனர்.
ஆனால் இதில் உண்மை என்னவென்றால், “செஞ்சம் என்னும் வீணை பாடுமே தோடி” என்றுதான் வாலியும் எழுதியிருக்கிறார். அதாவது செஞ்சம் என்பது ஒரு வகையான வீணையின் பெயராம். அந்த வீணை சோகத்தை வெளிப்படுத்துவதற்காக வாசிக்கப்படுவதாம். அதில் இருந்து வெளிவரும் இசை சோகத்தை உண்டாக்குவது போல் இருக்குமாம்.
ஆனால் தோடி என்ற ஒரு ராகத்தை இந்த வீணையில் வாசித்தால் சந்தோஷம் வெளிப்படுமாம். இதை குறிப்பிட்டுத்தான் வாலி இவ்வாறு எழுதினாராம். இத்திரைப்படத்தில் கதாநாயகனான ரகுமானின் மனைவி அவரிடம் எப்போதும் சண்டைப்பிடித்துக்கொண்டே இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முதன்முதலில் மூச்சு விடாமல் பாடியது இந்த பாடகர்தான்-அப்போ எஸ்.பி.பி. கிடையாதா?