இளையராஜா போட்ட மெட்டையே பாடலாக்கிய கவிஞர் வாலி.. என்ன பாடல் தெரியுமா?

Vaali ir
இயக்குனர் ஸ்ரீதர் எப்போதுமே எம்.எஸ்.விஸ்வநாதனைத் தான் போட்டு படம் எடுப்பார். ஆனால் இந்தப் படத்திற்கு மட்டும் இளையராஜாவுடன் கைகோர்த்து விட்டார். பாடல்கள் செம மாஸ் ஆனது. அதன்பிறகு இளையராஜாவுடன் இணைந்து தென்றலே என்னைத்தொடு, இளமை ஊஞ்சலாடுகிறது,
நினைவெல்லாம் நித்யா என பல ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். அப்படி வந்த ஒரு படம் தான் அழகே உன்னை ஆராதிக்கிறேன். இந்தப் படத்தில் இளையராஜா போட்ட ஒரு மெட்டுக்கு கவிஞர் வாலி அந்த மெட்டையே பாடலாக்கி அசத்தி விட்டார். அதைப் பற்றிப் பார்ப்போமா...
எல்லோரும் டியூனுக்குத் தான் பாட்டு எழுதுவார்கள். விரகதாபத்தை வெளிப்படுத்தக்கூடிய நாட்டுப்புற பாடல் இளையராஜா இசையில் வாலி எழுதுகிறார். 1979 ல் ஸ்ரீதர் இயக்கிய படம் அழகே உன்னை ஆராதிக்கிறேன். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் தன் காதலனோடு சேர்ந்து உற்சாக பானம் அருந்தி விரகதாபத்தில் இருக்கிறாள். அந்த இடத்துக்கு பொருத்தமான வரிகளைப் போட்டு இருப்பார் வாலி.

AUAR
இளையராஜா நானே நானான்னு மெட்டு போடுகிறார். அதே வார்த்தையில் இருந்து கவிஞர் வாலி பாடலை ஆரம்பிக்கிறார். நானே நானா யாரோ தானா... மெல்ல மெல்ல மாறினேனா...
இதுதான் அந்தப் பாடல்.
மது மயக்கத்தில் ஒரு பெண் விரகதாபத்தில் இருக்கும்போது பாடலை எழுதுவது என்பது சிக்கலான விஷயம். ஆனால் இந்த இடத்தில் கூட அற்புதமான வரிகளைப் போட்டு அசத்தியுள்ளார் கவிஞர் வாலி.
முதல் சரணத்தில் ஒருவன் நினைவிலே உருகும் இதயமே... இதோ துடிக்க, உலர்ந்த உதடுகள் தனிமைக் கவிதைகள் படிக்க, மதுவின் மயக்கமே உனது மடியில் இனிமே இவள் தான் சரணம் சரணம்னு வரிகள் போட்டு இருப்பார்.
2லது சரணத்தில் பிறையினில் வளர்வதும், பிறகு தேய்வதும் ஒரே நிலவு. உறவினில் கலப்பதும், பிரிவினில் தவிப்பதும் ஒரே மனது. பருவ வயதிலே இரவும் பகலுமே விரகம் நரகம் சரணம் சரணம்... என ரொம்பவே அழகாக இந்தப் பாடலை முடித்து இருப்பார் காவிய கவிஞர் வாலி. எவ்வளவு ஆழமான பொருளை எளிமையாகச் சொல்லிவிட்டார் பாருங்கள்.