தமிழ் சினிமாவின் பழம்பெரும் கவிஞராக திகழ்ந்த வாலி, “வாலிப கவிஞர்” என்றும் அழைக்கப்பட்டார். காலத்துக்கு ஏற்றார் போல் தனது பாடல் வரிகளை அப்டேட் செய்துகொண்டவர் வாலி. எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி மிர்ச்சி சிவா வரை கிட்டத்தட்ட 4 தலைமுறை நடிகர்களின் திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார் வாலி.
கவிஞர் வாலி தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 15,000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி சாதனை படைத்துள்ளார். மேலும் “ஹே ராம்”, “பார்த்தாலே பரவசம்” , ‘பொய்கால் குதிரை” போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட கலைப்புலி எஸ்.தாணு, வாலி தனது திரைப்படங்களில் கடைசி வரை சம்ளமே வாங்காமல் பணியாற்றியது குறித்தான ஒரு சம்பவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.
ஒரு முறை கவிஞர் வாலியின் பிறந்த நாளுக்கு ஒரு அழகான வாழ்த்து செய்தியுடன் ஒரு விளம்பரத்தை வெளியிட்டிருந்தாராம் எஸ்.தாணு. அந்த விளம்பரத்தை பார்த்து மெய் சிலிர்த்துப்போனாராம் வாலி. உடனே கலைப்புலி எஸ்.தாணுவை தொடர்புகொண்டு, “உன்னுடைய வாழ்த்து என்னைய மெய் சிலிர்க்க வச்சிடுச்சு. இனிமே உன் படத்துல பாட்டெழுதுறதுக்கு நான் சம்பளமே வாங்கமாட்டேன்” என கூறினாராம்.
எனினும் கலைப்புலி எஸ்.தாணு சம்பளம் வாங்கிக்கொள்ளும்படி மிகவும் வற்புறுத்தினாராம். ஆனால் அப்படியும் வாலி சம்பளம் வாங்க மறுத்துவிட்டாராம். வாலி சொன்னதை போல் தனது வாழ்நாளின் இறுதி வரை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த படங்களுக்கு சம்பளமே வாங்காமல் பாடல்கள் எழுதி கொடுத்தாராம் வாலி.
இதையும் படிங்க: வீண் பிடிவாதத்தால் விக்ரமன் கொடுத்த தோல்வி படம்… ஆனா கடைசியில நடந்ததுதான் ஹைலைட்!
சொர்க்கவாசல் திரைப்படம்…
Lucky Bhaskar:…
தனது வருங்கால…
Rajinikanth: தமிழ்…
நடிகர் திலகம்…