பாலி தீவில் வாணி போஜன்.. ஒரு நாள் வாடகை மட்டும் இம்புட்டா? கடல் கன்னியாவே மாறிட்டாங்க
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வாணி போஜன். ஊட்டியைச் சேர்ந்த 34 வயதான நடிகை வாணி போஜன், சின்னத்திரை நடிகையாக இருந்து சினிமாவில் முன்னணி நடிகையாக மாறிய சில நடிகைகளில் ஒருவர்.
விஜய் டிவி சேனலில் ஒளிபரப்பாகிய ஆஹா, ஜெயா டிவி சேனலில் ஒளிபரப்பாகிய மாயா ஆகிய தொடர்களை அடுத்து சன் டிவி சேனலில் ஒளிபரப்பாகிய தெய்வ மகள் சீரியலில் சத்யா எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமாக மாறினார். பின்னர் ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லட்சுமி வந்தாச்சு தொடரிலும் வாணி போஜன் நடித்திருந்தார்.
பின்னர் ஓ மை கடவுளே படத்தில் மீரா எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக பிரபலமானார். பின்னர் லாக் அப், மலேஷியா டூ அம்னீஷியா, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், மகான், மிரள் ஆகிய படங்களில் வாணி போஜன் நடித்துள்ளார். இதில் மகான் படத்தில் வாணி போஜன் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வெப் தொடர்களிலும் வாணி போஜன் நடித்துள்ளார். ட்ரிபிள்ஸ், தமிழ் ராக்கர்ஸ், செங்கலம் ஆகிய தொடர்களிலும் வாணி போஜன் நடித்துள்ளார்.
தற்போது விக்ரம் பிரபு உடன் பாயும் ஒளி நீ எனக்கு, சசிகுமார் உடன் பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, லவ், ரேக்ளா ஆகிய படங்களில் வாணி போஜன் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவராக வாணி போஜன் திகழ்கிறார்.
இன்ஸ்டாகிராமில் 2.4 மில்லியன் ரசிகர்களை கொண்ட வாணி போஜன், தற்போது இந்தோனேசியா பாலி தீவில் சுற்றுலா மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். Hilton Bali Resort-ல் இருந்து வாணி போஜன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த கடற்கரை விடுதியில் தங்க வாடகையாக 17,000 ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை வாடகை வசூலிக்கப்படுகிறது.