விடிய விடிய பண்றாங்க…நான் மிரண்டு போய்ட்டேன்… அந்த ஹீரோவால் கடுப்பான சின்னத்திரை நயன்தாரா.!

Published on: August 16, 2022
---Advertisement---

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து ஜொலித்த நடிகைகள் மிக குறைவு தான். அதிலும் இவர் வயதில் யாரேனும் நாயகியாக வந்துள்ளனரா என்றால் அதுவும் சந்தேகமே, அதனால் தான் என்னவோ சின்னத்திரை நயன்தாரா என வாணி போஜனை ரசிகர்கள் அன்போடு அழைக்கின்றனர்.

இவர் சின்னத்திரையில் ரசிகர்களை பெற்று , அதன் மூலம் பெரிய திரைக்கு வந்து, ஓ மை கடவுளே எனும் திரைப்படத்தில் நடித்துவிட்டு, அடுத்ததாக விக்ரம் உடன் இணைந்து மகான் படத்திலும் நடித்திருந்தார்.

இவர் தற்போது, தமிழ் ராக்கர்ஸ் எனும் வெப் தொடரிலும் நடித்துள்ளார். இந்த தொடரில், அருண் விஜய் ஹீரோவாக நடிக்க, அறிவழகன் இந்த சீரிஸை இயக்கியுள்ளார். முதன் முறையாக ஏ.வி.எம் நிறுவனம் வெப் சீரிஸை தயாரித்துள்ளது.

இதையும் படியுங்களேன் – நம்ம கேப்டன் இவளோ வெள்ளந்தியான மனுஷனா.?! பத்திரிக்கையாளருக்கு நடந்த ருசிகர சம்பவம்.!

vani

இப்படம் பற்றிய அனுபவம் கூறுகையில், சாதாரணமாக ஷூட்டிங் 6 மணி வரை இருக்கும். சில சமயம் அது 10 ஆகும். ஆனால், தமிழ் ராக்கர்ஸ் ஷூட்டிங்கில் விடிய விடிய ஷூட்டிங் பண்றாங்க. இயக்குனரும், ஹீரோவும் டயர்ட் ஆக மாட்டேங்குறாங்க. காலை 7 மணிக்கு ஆரம்பித்த ஷூட்டிங் விடிய விடிய நடந்து மறுநாள் காலை 7 மணிக்கு முடியுது.

நான் ஹீரோவிடம் கேட்டேன், நீங்க போனீங்கன்னா நானும் பின்னாடியே கிளம்பிருவேன். நீங்க போக மாட்டிறீங்க, நானும் இங்கேயே இருக்கேன். என அருண் விஜயிடம் நொந்து கொண்டாராம் குட்டி நயன்தாரா வாணி போஜன்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.