‘வாரிசு’ பட பிரம்மாண்ட வீடு!.. இவ்ளோ கோடியா?.. யாருடையது தெரியுமா?..

vijay
சமீபத்தில் வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பில் வெளியான படம் தான் ‘வாரிசு’ திரைப்படம். இந்தப் படத்தில் விஜய் , ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், சியாம், சங்கீதா உட்பட பலரும் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவான இந்தப் படம் ரசிகர்களின் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

vijay1
ஆனால் வசூல் ரிதியாக ஒரு கணிசமான வசூலை பெற்றிருக்கிறது. ஆனாலும் விஜய் ரசிகர்கள் கொண்டாட வேண்டிய படமாக வாரிசு படம் அமையாமல் போனதுதான் சின்ன வருத்தம். படம் பிரம்மாண்டமாக இருந்ததோ இல்லையோ அந்த படத்தில் விஜயின் குடும்பங்கள் தங்கியிருந்த வீடு மிகப் பிரம்மாண்டமாகவே இருந்தது.
சும்மா வெளி வாயிலிருந்து வீட்டிற்குள் போவதற்கே ஒரு கால் டாக்ஷி புக் பண்ணித்தான் போகனும் போல அந்தளவுக்கு மிகப்பிரம்மாண்டமாக கட்டியிருந்தார்கள். விசாரித்ததில் அந்த வீடு செட் தானாம். அதுவும் 8 கோடி செலவில் அந்த வீட்டின் செட்டை அமைத்திருக்கிறார்கள் படக்குழு.
இதற்கு ஒரிஜினலாகவே ஒரு பங்களாவை கட்டியிருக்கலாம். மேலும் வீட்டிற்குள் அமைந்திருந்த ஃபர்னிச்சர்ஸ் எல்லாமே புதியதாக வாங்கப்பட்டவையாம். இதற்கே பல கோடி செலவாயிருக்கிறதாம். மேலும் அந்த செட்டிற்கு என்று இருந்த இடம் தில் ராஜுவின் இடமாம். அவருக்கு சொந்தமான இடத்தில் தான் அந்த பிரம்மாண்ட செட்டை அமைத்திருக்கிறார்கள்.

vijay2
10 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த அளவுக்கு செட் போட்டு அமைந்த படக்குழு கதையில் கொஞ்சம் உஷாராக இருந்திருக்கலாம் என்று கோடம்பாக்கத்தில் பேசி வருகின்றனர்.
இதையும் படிங்க : எஸ்கேப் ஆக நினைத்த விஜய்.. தயாரிப்பாளரிடம் கோர்த்துவிட்ட சரத்குமார்..