Connect with us

Cinema News

தளபதி விஜயின் வாரிசு பட நிறுவனம் வெளியிட்ட ஷாக்கிங் செய்தி… குழப்பத்தில் ரசிகர்கள்…

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “வாரிசு”. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக சென்னையில் நடைபெற்று வருகிறது.  படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தை தயாரிப்பதை போல, பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் “RC15” என்ற படத்தையும், தயாரித்து வருகிறது. இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு RC15 படத்திற்காக ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் நல்ல நடிக்க தெரிந்த நடிகர்களை தேர்ந்தேடுத்து வருகிறார்கள் என தகவல்கள் பரவியது.

இதையும் படியுங்களேன்- நான் பக்கா அஜித் ரசிகன்.! மெகா ஹிட் விஜய் பட இயக்குனரை வருத்தப்பட வைத்த அந்த சினிமா பிரபலம்…

sri venkateswara creations RC15

இதனை பார்த்த பலர் ரசிகர்கள் குழப்பத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்திடம் எங்கு ஆடிசன் நடைபெறவுள்ளது..? எத்தனை வயதுடையவர்கள் கலந்து கொள்ளலாம் என்கிற அளவிற்கு கேள்வி எழுப்பி வந்தனர். இதனால் அதிர்ச்சியான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் ட்வீட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அறிக்கையில் ” RC15 படத்தில் புதுமுக நடிகர்கள் நடிக்க வைப்பது குறித்து சமூக ஊடகங்களிலும் பல்வேறு விதமாக பரவும், கலைஞர்களிடமும் செய்யப்படும் அணுகுமுறைகள் முற்றிலும் வதந்தி. நாங்கள் எந்த ஆடிசனும் நடத்தவில்லை. இதைப் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்துள்ளனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top