பிரச்சினையாவது மன்னாங்கட்டியாவது!.. ஆந்திராவின் உதயநிதியே இவர்தானாம்!..
இப்போது இணையத்தில் டிரெண்டிங்கான செய்தியே விஜய் நடிப்பில் தயாராகி கொண்டிருக்கும் வாரிசு படத்தின் பிரச்சினை பற்றி தான். வம்சி இயக்கத்தில் விஜய் , ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் திரைப்படம் வாரிசு.
இந்த படத்தில் சரத்குமார், பிரபு, சங்கீதா, யோகிபாபு, குஷ்பு போன்ற பல நட்சத்திரங்கள் ஒன்று சூழ ஒரு குடும்பபாங்கான திரைப்படமாக தயாராகி கொண்டிருக்கிறது வாரிசு. இந்த படத்தில் விஜயை பூவே உனக்காக படத்தில் நடித்திருக்கும் விஜயை போன்று எதிர்பார்க்கலாம் என்ற செய்திகள் வாரிசு படத்தின் பூஜை போடப்பட்ட சமயத்தில் இருந்தே வெளியாகி கொண்டிருந்தது.
இரு மொழிகளில் வாரிசு
வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு என பைலிங்குவல் படமாக உருவாகி கொண்டிருக்கின்றது. தமிழில் வாரிசு எனவும் தெலுங்கில் வாரசூடு எனவும் வெளியிடப்படுகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் தமன் இசையில் பிரின்ஸ் திரைப்படத்தில் அமைந்த who am i பாடல் ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
நடிகர் விஜய்க்கு என்றால் சும்மா இருப்பாரா என்ன? ஏற்கெனவே முதல் சிங்கிளான ரஞ்சிதமே பாடல் 5 மில்லியன் வியூவ்ஸ்களை தாண்டி போய்க் கொண்டிருக்கிறது. படம் வருகிற ஜனவரி 12 ஆம் தேதி பொங்கல் டிரீட்டாக அஜித்தின் துணிவோடு மோத இருக்கின்றது.
இடியாப்ப சிக்கலில் வாரிசு
இந்த நிலையில் வாரிசு பட ரிலீஸில் சிக்கல் இருப்பதாக கடந்த வாரங்களாகவே செய்திகள் உலா வருகின்றது. தமிழில் எந்த பிரச்சினையும் இல்லாத நிலையில் தெலுங்கில் வெளியிட மறுப்பு தெரிவித்து வருவதாக தெரிகிறது. பண்டிகை நாள்களில் நேரடி தெலுங்கு படத்திற்கு மட்டும் தான் முதல் முன்னுரிமை அளிக்கப்படும் என கூறப்பட்டு வந்தது.
இதனால் வாரிசு படம் பொங்கல் அன்று அங்கு ரிலீஸ் ஆகாத நிலையில் தமிழ் நாட்டிலும் ரிலீஸ் செய்யமுடியாத நிலை இருந்தது. ஏனெனில் வாரிசு படம் தெலுங்கு டப் மூவி லிஸ்டில் தான் அடங்கும் நேரடி தெலுங்கு படம் இல்லை என்ற காரணத்தால் தான் இந்த பிரச்சினை தொடர்ந்து நீடித்து வந்தது.
ஆந்திராவின் உதயநிதி
ஆனால் இப்ப உள்ள நிலவரப்படி தெலுங்கு புரடியூசர் கவுன்சிலில் எழுந்த அந்த பிரச்சினையால் வாரிசு படத்திற்கு எந்த பாதிப்பும் வராது என்ற ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் தமிழ் நாட்டில் உள்ளது போல் தெலுங்கு புரடியூசர் கவுன்சிலில் தயாரிப்பாளர் கவுன்சில்,ஆக்டிவ் புரடியூசர் கவுன்சில் என சங்கங்கள் பிரிந்து காணப்படுகிறதாம். அதில் ஆக்டிவ் புரடியூசர் கவுன்சிலின் தலைமையே வாரிசு பட தயாரிப்பாளரான தில் ராஜு தானாம்.
இங்கு எப்படி உதய நிதி எல்லா படங்களையும் வாங்கி ரிலீஸ் செய்கிறாரோ அதே பவரோடு தெலுங்கில் இருப்பவர் தில் ராஜு தானாம்.ஆதலால் இவர் இருக்கும் போது வாரிசு படம் ரிலீஸ் செய்வதில் பிரச்சினை எதும் இருக்காது என தெரிவித்து வருகின்றனர்.