ஃபுல் ஃபார்ம்ல தான் இருக்காங்க!.. ‘வாரிசு’ பட டிரெய்லர் வெளியாகும் நிலையில் அஜித் ரசிகர்கள் செய்த உச்சக்கட்ட சம்பவம்!..
புத்தாண்டு பிறந்ததில் இருந்து ரசிகர்களிடையே கவுண்டவுனும் ஆரம்பமாகிவிட்டது. வாரிசு மற்றும் துணிவு ஆகிய படங்களின் ரீலிஸ் செய்திகள் தான் இப்போது இணையத்தை ஆட்கொண்டு வருகிறது. ரசிகர்கள் மாறி மாறி தங்களது பலத்தை காட்டி வருகின்றனர். வாரிசு , துணிவு படங்களின் செய்திகள் இல்லாமல் அன்றைய தினம் இல்லை.
தினந்தோறும் ஏதாவது ஒரு செய்தி வந்து கொண்டே இருக்கிறது. ஒருவாரத்திற்கு முன்பு தான் துணிவு படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை கூஸ் பம்பில் வைத்தது. அதே வகையில் இன்று மாலை விஜயின் வாரிசு படத்தின் டிரெய்லர் வெளியாக உள்ளது. துணிவு படத்தில் அஜித் பேசிய ‘என்ன மாதிரி ஒரு அயோக்கிய பையன்கிட்ட வச்சுக்கலாமா’? என்ற வசனம் மிகவும் டிரெண்டிங்கில் உள்ளது.
இதையும் படிங்க : படத்திற்காக கட்டிய தாலி!.. நடிகர் மீதுள்ள அன்பால் கழட்ட மறுத்த நடிகை!..
அதற்கு பதிலளிக்கும் வகையில் வாரிசு பட டிரெய்லரிலும் விஜயின் வசனம் கண்டிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மதுரையில் வாரிசு படத்தின் டிரெய்லர் ஷோவிற்காக முன்பதிவு நடந்து வருகிறது. கரூரில் ஒரு தியேட்டரையே டிரெய்லர் பார்ப்பதற்காக முன்பதிவு செய்துள்ளனர் விஜய் ரசிகர்கள்.
இது ஒரு புறம் இருக்க நாகையில் புகழ்பெற்ற நாகூர் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நடைபெற்று வருகிறது, அந்த தர்காவில் அஜித் ரசிகர்கள் செய்த அட்டகாசம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது. தர்காவின் முகப்பில் ஒரு பெரிய எல்.இ.டி. திரையில் துணிவு படத்தின் போஸ்டரையும் படத்தின் டிரெய்லரையும் போட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். அந்த வீடியோ தான் இப்போது வைரலாகி வருகிறது.
வாரிசு , துணிவு படங்கள் ரிலீஸ் ஆவதற்கு முன் இன்னும் என்ன என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ என்ற கவலையில் பொதுமக்கள் இருக்கின்றனர். மேலும் தியேட்டர் உரிமையாளர்களும் கதிகலங்கி போய் இருக்கின்றனர். ஆனால் இப்படி சொந்த வேலையையும் பொருட்படுத்தாமல் ரசிகர்கள் செய்யும் செயலை கண்டு அஜித், விஜய் சும்மா இருப்பது தான் வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்று கோடம்பாக்கத்தில் புலம்பி வருகின்றனர்.