சின்னத்தம்பி படத்தில் மனோராமா வேண்டாம்!.. யோசித்த பி.வாசு.. நடந்தது இதுதான்!..
பிரபுவுக்கு பல ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் பி.வாசு. இவரின் இயக்கத்தில் பிரபுவும், குஷ்புவும் பல திரைப்படங்களில் இணைந்து நடித்தனர். பி.வாசு - பிரபு - குஷ்பு கூட்டணி என்றாலே அப்படம் ஹிட் என்கிற நிலை இருந்தது. மேலும், பி.வாசுவின் படங்களுக்கு இளையராஜா இசை என்பதால் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகும். மேலும், கவுண்டமணி - செந்திலையும் வைத்து காமெடிகளில் அதகளம் பண்ணியிருப்பார்.
இவரின் இயக்கத்தில் பிரபுவும், குஷ்புவும் இணைந்து நடித்த திரைப்படம் சின்னத்தம்பி. 1991ம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது. பிரபு - குஷ்பு காம்பினேஷன் ரசிகர்களை கவர துவங்கியது இந்த படத்தில் இருந்துதான்.
சின்னத்தம்பி திரைப்படத்தில் பிரபுவுக்கு அம்மாவாக மனோரமா நடித்திருப்பார். இவரின் கதாபாத்திரமும் அப்படத்தில் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கும். மனோராமா வரும் செண்டிமெண்ட் காட்சிகள் ரசிகர்களை உருக வைத்தது. ஆனால், இந்த படத்தில் மனோரமாவை நடிக்க வைக்க வேண்டாம் என பி.வாசு நினைத்தாராம்.
அதற்கு காரணமும் இருக்கிறது. இந்த படத்திற்கு முன்பு பி.வாசு இயக்கிய திரைப்படம் நடிகன். அப்படத்தில் சத்தியராஜை பார்த்து ஜொள்ளுவிடும் வேடத்தில் மனோரமா நடித்திருப்பார். எனவே, ரசிகர்கள் அப்படி பார்த்த மனோரமாவை செண்டிமெண்டான அம்மா வேடம் எனில் ஏற்றுக்கொள்வார்களா என்கிற சந்தேகம் பி.வாசுவுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால், ரசிகர்கள் அதையெல்லாம் மறந்துவிடுவார்கள் என அவரை மனோரமா சம்மதிக்க வைத்துதான் சின்னத்தம்பி படத்தில் நடித்தாராம்.
இதையும் படிங்க: சைனிங் உடம்பு தளதளன்னு இருக்கு!.. பீச்சில் கிளுகிளுப்பு காட்டும் மிர்னாளினி ரவி…