விஜய் டைட்டிலை தட்டி தூக்கிய தனுஷ்... மாஸாக வெளியான வீடியோ....
தமிழ், ஹாலிவுட், பாலிவுட் என கலக்கி வரும் நடிகர் தனுஷ் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. தற்போது அது உறுதியாகியுள்ளது. தெலுங்கு தமிழ் என 2 மொழிகளில் வெளியாகும் இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கவுள்ளார். நாக வம்சிஸ் மற்றும் சாய் சௌஜன்யா என இருவரும் தயாரிக்கவுள்ளனர்.
இப்படத்திற்கு வாத்தி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மாஸ்டர் படத்தில் விஜயை அனைவரும் வாத்தி என அழைப்பார்கள். எனவே, அதையே தனுஷுக்கு தலைப்பாக வைத்துள்ளனர். மேலும், இப்படத்தில் தனுஷ் ஒரு கல்லூரி ஆசிரியராக நடிக்கவுள்ளார். இப்படத்தின் கதை இந்தியாவில் உள்ள கல்வியை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
தனுஷ் ஏற்கனவே திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து முடித்துள்ளார். மாறன் என்கிற படமும் முடிவடையும் நிலையில் உள்ளது. மேலும், அவர் நடித்த பாலிவுட் படமான அட்ராங்கி ரே படமும் நாளை வெளியாகவுள்ளது.
இந்நிலையில்தான் வாத்தி படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பான டைட்டில் மோஷன் போஸ்டரையும் தனுஷ் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
#vaathi #sir title motion poster pic.twitter.com/0oOnUPQpTH
— Dhanush (@dhanushkraja) December 23, 2021