வாழை ‘OTT’ ரிலீஸ் தேதி இதுதான்!

Published on: September 12, 2024
---Advertisement---

கடந்த மாதம் வெளியாகி விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்ற வாழை படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் நடிப்பில் ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி வெளியான படம் வாழை.

உண்மை சம்பவத்தினை எடுத்துக்கொண்டு அதை தனக்கேயுரிய நேர்த்தியில் சொன்ன மாரி இயக்குநராக மீண்டும் ஒருமுறை ஜெயித்துள்ளார். குறிப்பாக அந்த சிறுவனின் நடிப்பு ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்து விட்டது.

முதலில் ஓடிடியில் ரிலீஸ் செய்யும் வகையில் தான் இந்த படத்தினை எடுத்துள்ளனர். பின்னர் ரெட் ஜெயண்ட் நிறுவனம் உள்ளே வந்ததும் தியேட்டர்களில் படம் வெளியாகி நல்ல லாபத்தினை பார்த்து விட்டது.

இந்தநிலையில் வாழை படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி செப்டம்பர் 27-ம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வாழை வெளியாகிறது. கோட் படத்தால் நிறைய திரையரங்குகளில் வாழை படத்தை நீக்கி விட்டனர்.

இதனால் திரையரங்குகளில் இப்படத்தினை பார்த்து ரசிக்க முடியாதவர்கள் ஓடிடியில் கண்டு களிக்கலாம். குறிப்பாக நெட்டிசன்கள் இந்த படத்திற்காக ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

ரூபாய் 2 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சுமார் 15 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

manju

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.