வாழை மாதிரி படம் தான் சமூகத்துக்கு தேவை... நெல்சன் பேசியது அருவருப்பு..!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்து இருக்குற வாழை டிரெய்லர் பற்றிப் பார்ப்போம். மாரி செல்வராஜ் ஒரு மாறுபட்ட இயக்குனர். அவரது முதல் படம் பரியேறும் பெருமாள். கர்ணன், மாமன்னன் என எல்லாப் படங்களுமே ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளை அழகாகச் சொன்ன படம்.

மாரி செல்வராஜ் இந்தப் படத்தைப் பற்றி என்ன சொல்றாருன்னா இதைத் தாண்டி இன்னொரு படம் எடுக்க முடியுமான்னு தெரியல. ஏன்னா இது என்னோட வாழ்க்கையின் வலிகளைச் சொன்ன படம். நான் பட்ட அடிகளைச் சொன்ன படம்.

ஒரு திரைப்படம் என்பது யாரும் பேசாத பேசுபொருளைப் பேசணும். இன்னொன்னு ஒரு மக்களின் வலிகளைக் கடத்தணும். எந்த சமூகம் கடத்துதோ அதை அழுத்திக்கிட்டு இருக்குற சமூகத்துக்கு ஒரு குற்ற உணர்ச்சியா இருக்கணும். நாம இப்படி பண்ணிட்டோமேன்னு இந்த விஷயங்கள் எல்லாம் வந்துட்டுன்னா அது தான் ஒரு சிறந்த சமூகத்துக்கான படைப்பா இருக்கும் என்பது தான் யதார்த்தம்.

இந்த வாழை படத்துல வாழைத்தார் வெட்றது, அதைப் பள்ளிக்கூடத்துக்கு வர்ற பசங்க தூக்கிட்டு வர்றாங்க. பள்ளி செல்லும்போது ஆசிரியர்கள், மாணவர்கள் உறவு பற்றியும் சொல்லப்படுகிறது.

ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளைப் புரிய வைக்கிறதுக்கு பல சூழ்நிலைகள் இந்ப் படத்துல வருது. குறிப்பா இப்படி ஒரு வாழ்வியலை யாரும் சொல்லல. வாழைத்தார் வெட்றதுக்கு ஒருவர் இருப்பார். சமயங்களில் அரைகிலோ மீட்டர் வரை சுமந்தபடி லாரிக்குத் தூக்கி வரவேண்டும். அதிலும் சமூகத்தில் பின்தங்கிய பசங்க தான் இந்த வேலையைச் செய்றாங்க.

கடைசியில் வாழைத்தாரே வேணாம்கற இடத்துக்குப் போறான். இந்த மாதிரியான படைப்புகள் தான் இன்றைக்கு சமூகத்துக்குத் தேவை. வித்தியாசமான வாழ்வியலைச் சொல்லும் படம். படம் வந்ததும் அதில் குறை இருந்தால் விமர்சனம் பண்ணுங்க. எடுத்ததுமே மாரிசெல்வராஜான்னு கேட்காதீங்க.

MS

MS

நெல்சன் எதிர்மறையா பேசினாரு. அவர் பேசினதை வைத்தே அவரது மட்டம் என்னன்னு கண்டுபிடிச்சிடலாம். மக்களின் வலிகளை உள்வாங்கிக் கொண்டு அதைப் படைக்கும் படைப்பாளி ஒருவகை இயக்குனர். இன்னொன்னு தனக்கான எந்த வாழ்வியலும் இருக்காது. எதையும் படிக்க மாட்டாங்க. கண்ட மாதிரி எடுத்து வெற்றி பெறணும்னு நினைப்பாங்க. இப்படி 2 வகையான இயக்குனர்கள் இருக்காங்க.

நெல்சன் 'டீச்சர் ஜொள்ளு'ன்னு அருவருப்பா மேடையில பேசிருக்காரு. அவரு அவ்வளவு தான். பசங்க வாழையைக் கட்டி கம்மாய்ல போட்டு அதுல படுத்துக்கிட்டே பேசுறது எல்லாம் ரொம்ப அருமையா இருக்கும். இந்த மாதிரியான பேசு பொருள்கள் தான் சினிமாவுக்குத் தேவை. மேற்கண்ட தகவலை பிரபல திரைஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

Related Articles
Next Story
Share it