வடசென்னை 2 இப்படித்தான் இருக்கப் போகுது!.. மீண்டும் தனுஷுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை..

vetrimaran
தமிழ் சினிமாவில் தொடர்ந்து 6வது முறையாக வெற்றியை கொடுத்த இயக்குனராக வெற்றிமாறன் இருக்கிறார். முதல் படத்தில் இருந்து இப்போது ரிலீஸான விடுதலை படம் வரை அனைத்து படங்களுமே அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தான் பதிவு செய்திருக்கின்றன. இயக்கிய 6 படங்களில் 4 முறை தனுஷுடன் இணைந்து கூட்டணி வைத்து வெற்றிமாறன் தனுஷ் கூட்டணி வெற்றிக் கூட்டணி என்ற பெயரையும் எடுத்து விட்டனர்.

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற படங்கள் தனுஷுடன் இணைந்து பணியாற்றிய வெற்றித் திரைப்படங்களாகும். இதில் ரசிகர்கள் அனைவரும் வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்தை தான் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

அதற்கு இடையில் விடுதலை படம் கிட்டத்தட்ட 3 வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டே இருந்ததால் மேலும் மேலும் வடசென்னை 2 படத்தின் எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்தது. வடசென்னை 2 வா? இல்லை வாடிவாசல் ஆ? என்றும் யூகித்துக் கொண்டிருந்தனர்.
இதில் வெற்றிமாறன் விடுதலை படத்திற்கு பிறகு கண்டிப்பாக வடசென்னை 2 படம் தான் என்று உறுதியாக சொல்லிவிட்டார். அதிலும் குறிப்பாக தனுஷுடன் சமந்தா, ஆண்டிரியா ஆகியோரும் சேர்ந்து நடிக்க உள்ளனராம். ஏற்கெனவே வடசென்னை முதல் பாகத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருப்பார்.

ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில் சமந்தா நடிக்க உள்ளதாக வெற்றிமாறனே கூறியிருக்கிறார். ஏற்கெனவே தனுஷ் சமந்தா தங்கமகன் என்ற படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். மேலும் இந்தப் படம் காதல், பழிக்கு பழி, துரோகம், ரொமான்ஸ், எமோஷன் என எல்லாம் கலந்த படமாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : செந்திலே நடிக்கும் போது இவர் இல்லாமலா?.. ‘லால்சலாம்’ படத்தில் ரஜினியுடன் கூட்டணி சேரும் மற்றுமொரு காமெடி நடிகர்!..