கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடித்து கடந்த வெள்ளிக்கிழமை வெளியான வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை அள்ளினாலும் ரசிகர்கள் அவரது முந்தைய படங்கள் ரசிகர்களை சோதித்த நிலையில், பெரிதாக தியேட்டருக்கு செல்லும் ஆர்வத்தையே விட்டு விட்டனர் என்கின்றனர்.
வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் சந்தானத்துக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் அதற்கு நேர்மாறாக இருப்பதாகவே தெரிகிறது.
இதையும் படிங்க: டெத் டிராமா இப்படி வேட்டு வைக்கும் நினைக்கலையே!.. 5 வருஷத்துக்கு ஜெயிலா?.. பூனம் பாண்டேவுக்கு ஆப்பு!
சிவகார்த்திகேயன் ரூட்டை பிடித்து சந்தானம் தியேட்டர் தியேட்டருக்கா சென்று புரமோஷன் செய்தாலும் அவருக்கு வரும் கூட்டம் இன்னமும் சந்தானம் படங்களுக்கு வருவது இல்லை என்பது தான் நிதர்சணமான உண்மையாக உள்ளது.
80ஸ் பில்டப் படத்தை நம்பி போய் ஏமாந்த ரசிகர்கள் இனிமேல் சந்தானம் படத்தை பார்க்கவே மாட்டோம் என்கிற முடிவுக்கே வந்து விட்டார்களா? என்ன என தெரியவில்லை. முதல் நாளில் வெறும் 1 கோடி ரூபாய் வசூல் செய்த வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் 2வது நாளில் ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவாக வசூல் செய்து இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. 2 நாட்களும் சேர்த்து மொத்தமாக 1.9 கோடி ரூபாய் தான் வசூல் செய்துள்ளதாக கூறுகின்றனர்.
இதையும் படிங்க: சும்மாவே பாப்போம்! இதுல இப்படி போஸ் கொடுத்தா? வைரலாகும் தொகுப்பாளினி டிடி வீடியோ
சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் 75 கோடி ரூபாய் என அதிகாரப்பூர்வ அறிவிப்பே வெளியான நிலையிலும், அந்த படத்தின் பட்ஜெட்டுக்கும் கடனுக்கும் அந்த வசூலே போதவில்லை என்கின்றனர்.
சந்தானம் சம்பளமே 8 கோடி ரூபாயாக உள்ள நிலையில், அவர் நடிப்பில் வெளியான அதிக பட்ஜெட் படமே இதுதான் எனக் கூறியிருந்தார். 15 கோடியில் எடுத்திருந்தாலும் இன்னும் 15 நாட்கள் ஓடினால் தான் போட்ட முதலே வரும் என்கின்றனர். அடுத்த வாரம் லால் சலாம் வரும் நிலையில், வடக்குப்பட்டி ராமசாமி நிலைமை மோசம் அடையும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
Good bad…
கங்குவா திரைப்படத்தில்…
சிவகார்த்திகேயனைப் பொருத்த…
கங்குவா படத்தின்…
தனுஷ், நயன்தாரா…