டிக்கிலோனா படத்தை இயக்கிய கார்த்திக் யோகி மீண்டும் சந்தானத்தை வைத்து இயக்கியுள்ள வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் அதிகபட்சமாக 600 தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு நான் நடித்ததிலேயே பெரிய பட்ஜெட்டில் உருவான படம் இந்த வடக்குப்பட்டி ராமசாமி தான் என சந்தானம் கூறியிருந்தார்.
கடந்த ஆண்டு சந்தானம் டிடி ரிட்டர்ன்ஸ், கிக் மற்றும் 80ஸ் பில்டப் என ஷாருக்கான் போல வரிசையாக ஒரு வருஷத்தில் 3 படங்களை ரிலீஸ் செய்தார். ஆனால், அதில், டிடி ரிட்டர்ன்ஸ் மட்டும் தான் தேறியது.
இதையும் படிங்க: என்கிட்டையே திமிரா நடந்துக்கலாமா? சீண்டிய தயாரிப்பாளரை கடனாளியாக்கிய கமல்ஹாசன்…
மற்ற இரண்டு படங்களான கிக் மற்றும் 80ஸ் பில்டப் தெறித்து ஓட வைத்தது. தம்பி அந்த பக்கம் போயிடாதீங்க என பலரும் ட்ரோல் பண்ணினார்கள். இந்நிலையில், மஞ்ச சட்டை, கையில சூலம், விக் தலை என வித்தியாசமாக இருந்த சந்தானம் படம் சரியா வருமா என்கிற சந்தேகம் இருந்து வந்தது. ஆனால், எதிர்பார்க்காத அளவுக்கு காமெடி காட்சிகள் திடீரென இந்த முறை சந்தானம் படத்திற்கு செட்டிங்காக அமைந்து சூப்பர் ஹிட் படமாக வடக்குப்பட்டி ராமசாமி மாறியிருக்கிறது.
பானைகளை வைத்து வியாபாரத்தை நேர்மையாக செய்ய நினைக்கும் குடும்பத்திற்கு வருமானம் கிடைக்கவில்லை. இந்த உலகத்துல பித்தலாட்டம் பண்ணி ஏமாற்றி பிழைப்பவர்கள் தான் கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர் என நினைத்துக் கொண்ட சிறு வயது சந்தானம் கடவுள் பக்தி என்கிற பெயரில் ஊர் மக்களிடம் உள்ள மூடநம்பிக்கையை நன்றாக புரிந்துக் கொண்டு ஏமாற்றும் வேலைகளில் இறங்கி அதிகமாக சம்பாதிக்க ஆரம்பிக்கிறார். அந்த ஊருக்கு வரும் தாசில்தார் ஒருவருக்கும் இவருக்கும் நடக்கும் பிரச்சனை கடைசியில் என்ன ஆகிறது என்பது தான் இந்த வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் கதை.
இதையும் படிங்க: நடிகை பூனம் பாண்டே திடீர் மரணம்!. இன்ஸ்டாகிராமில் வெளியான அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..
சந்தானம், மேகா ஆகாஷ், நிழல்கள் ரவி, எம்.எஸ். பாஸ்கர், மாறன், சேஷு, ரவி மரியா, ஜான் விஜய் என நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ள இந்த படத்தில் அனைவரையும் விட நிழல்கள் ரவி காமெடி டிராக்கில் சிறப்பாக ஸ்கோர் செய்து வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார். மேலும், கூல் சுரேஷ், பிரசாந்த் ரங்கசாமி உள்ளிட்டோரின் காமெடி காட்சிகளும் படத்திற்கு பலம் தான்.
வடக்குப்பட்டி ராமசாமி – வசூல் ராஜா!
ரேட்டிங் – 3.75
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…
Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்ஷனுக்கு பதில்…
உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…
பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…