நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா - ரசிகர்கள் அதிர்ச்சி

by சிவா |
vadivelu-3
X

நகைச்சுவை நடிகர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் பல திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தவர் நடிகர் வடிவேலு. இவர் இல்லாத மீம்ஸ்களே கிடையாது. பல வார்தைகள் கூற முடியாததை இவரின் ஒற்றை ரியாக்‌ஷன் கூறிவிடும். இவர் நடித்த பல திரைப்படங்கள் வெற்றியை பெற்றுள்ளது.

இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் அவருக்கு ரெட் கார்டு விதிக்கப்பட்டு சில வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். தற்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ளர். சுராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தில் அவர் நடிக்கவுள்ளார்.இந்த படம் தொடர்பாக சமீபத்தில் சுராஜ், வடிவேலு உள்ளிட்ட சிலர் லண்டனுக்கு சென்றனர்.

vadivelu

இந்நிலையில், லண்டனிலிருந்து திரும்பிய அவரை பரிசோதனை செய்த போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து, ரசிகர்கள் பலரும் அவர் விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Next Story