கவுண்டமணியை புகழ்ந்த பயில்வான் ரங்கநாதன்..வடிவேலு என்ன செய்தார் தெரியுமா?....

by சிவா |   ( Updated:2022-09-17 14:25:57  )
bailwan
X

திரையுலகை பொறுத்தவரை போட்டி, பொறாமைகள் எப்போதும் அதிகம். தனக்கு பிடிக்காதவர்கள் ஜெயித்துவிடக்கூடாது என கருதும் பலரும் அந்த துறையில் இருப்பார்கள். அல்லது பலரையும் அந்த துறை அப்படி மாற்றிவிடும்.

மேலும், இவன் வளர்ந்துவிட்டால் நம்மை மதிக்கமாட்டான் எனக்கருதி பலரின் வளர்ச்சியை எப்படியாவது தடுக்க போராடுவார்கள். ஆனால், அதையும் மீறித்தான் இங்கே நடிகர்கள் சினிமாவில் வாய்ப்புகளை பெற்று நடித்து, ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து ஒரு இடத்திற்கு செல்கின்றனர்.போராடித்தான் தங்களுக்கான இடங்களை கலைஞர்கள் பெறுகின்றனர். அதேபோல், ஒருவருக்கு பிடிக்காத ஒருவரை, ஒருவர் பாராட்டினாலோ, புகழந்து பேசினாலோ அவரையும் ஒதுக்கி விடுவார்கள்.

இது போன்ற சம்பவம் தனக்கும் நடந்துள்ளதாக நடிகரும், யுடியூப் பிரபலமும் ஆன பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். காமெடியில் உச்சம் தொட்டவர் கவுண்டமணி என்றால் யாரும் மறுக்கமாட்டார்கள். அவருக்கு பின் வந்தவர்களில் வடிவேலு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

vadivelu

தான் நடிக்கும் திரைப்படங்களில் தேவைப்பட்டால் பயில்வான் ரங்கநாதனை அழைத்து வாய்ப்பு கொடுப்பது வடிவேலுவின் வழக்கம். ஒரு பேட்டியில் பயில்வான் ‘காமெடி கிங் என்றால் அது கவுண்டமணி மட்டுமே. இப்போதும் அவரின் காமெடி காட்சிகளை தொலைக்காட்சியில் ரசிகர்கள் ரசித்து பார்க்கிறார்கள்’ எனக்கூற, இது வடிவேலுவுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாம். அதன்பின், தான் நடிக்கும் படங்களில் பயில்வான் ரங்கநாதனுக்கு வாய்ப்பு கொடுப்பதையே நிறுத்திவிட்டாராம். இந்த தகவலை பயில்வான் ரங்கநாதனே தெரிவித்துள்ளார்.

Next Story