தற்சமயம் சீரியல்களின் மூலம் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக திகழ்ந்துவரும் மாரிமுத்து அவர்கள் முன்னாள் இயக்குனரும் மற்றும் சிறந்த நடிகரும் ஆவார்.இவர் பல திரைப்படங்களில் பின்னணி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.மேலும் இயக்குனர் ராஜ்கிரன் அவர்களுக்கு உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். தற்சமயம் எதிர்நீச்சல் எனும் சீரியல் மூலம் 2கே கிட்ஸ்களின் ஃபேவரட் ஆக்டராக வலம் வந்து கொண்டிருக்கிறார் மாரிமுத்து.
இந்த நிலையில் தற்சமயம் ஒரு நேர்காணலில் தனது முன்னாள் அனுபவங்களை பற்றி எல்லாம் பகிர்ந்து உள்ளார். அதில் குறிப்பாக அரண்மனைக்கிளி எனும் திரைப்படத்தில் வரும் காமெடி நிகழ்வுகளை எல்லாம் காலம் கடந்தும் அதனைப் பற்றி பேசியிருக்கிறார்.
இயக்குனர் மாரிமுத்து அவர்கள் தேனி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர் ஆரம்ப காலங்களில் துணை இயக்குனராக நிறைய திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் பணியாற்றிய இயக்குனர்கள் ராஜ்கிரன், எஸ் ஜே சூர்யா, மணிரத்தினம் போன்ற முன்னணி இயக்குனர்கள் உடனும் தனது சினிமா பயணத்தை தொடங்கி இருக்கிறார்.இந்த நிலையில் நீண்ட காலம் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வராத நிலையில் 2008 ஆம் ஆண்டு கண்ணும் கண்ணும் எனும் திரைப்படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.இவர் இயக்கிய முதல் திரைப்படமே தோல்வி படமாக அமைந்தது. இதனை அடுத்து மீண்டும் புலிவால் எனும் திரைப்படத்தையும் இயக்கி இருந்தார். இந்த படமும் மாபெரும் தோல்வியை தழுவியதால் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குறைய தொடங்கின.
இதையும் படிங்க- எவன்கிட்டயும் நான் போய் சான்ஸ் கேட்க மாட்டேன்… சினிமாவால் கடுப்பாகி பாலச்சந்தர் எடுத்த முடிவு!..
இந்த நிலையில் மாரிமுத்து அவர்கள் தற்சமயம் சிறு சிறு கதாபாத்திரங்களில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக அவர் நடித்த பரியேறும் பெருமாள் எனும் திரைப்படத்தில் தனது நடிப்பின் திறமையை அற்புதமாக வெளிப்படுத்தி இருந்தார்.அதன் மூலம் அனைத்து மக்களாலும் பாராட்டையும் பெற்றார். அந்த படத்திற்கு பிறகு இவருக்கு நிறைய தமிழ் சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கின. தற்சமயம் சன் டிவியில் ஒளிபரப்பாகிய எதிர்நீச்சல் எனும் சீரியலில் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி நிறைய தக்கலைப் காமெடிகளை கொடுத்து வருகிறார். இவர் ஏமா ஏய் எனும் வசனம் அனைத்து மக்களாலும் வெகுவாக கவரப்பட்டு வருகிறது. இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்களும் அதிகரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இயக்குனர் மாரிமுத்து அவர்கள் அரண்மனைக்கிளி திரைப்படத்தில் பங்காற்றிய நிகழ்வுகளை எல்லாம் ஒரு நேர்காணலில் பதிவிட்டுள்ளார். அதில் அரண்மனைக்கிளி திரைப்படத்தில் நடிகர் வடிவேலு நடித்த காமெடிகள் அனைத்தும் என்னுடைய அம்மா எனக்கு சொன்ன காமெடிகள் அந்த காமெடியை தான் நான் இயக்குனரிடம் சொன்னேன். உடனே இயக்குனர் அதனை வடிவேலுவை வைத்து அந்த காமெடியை பண்ணினார். அந்த காமெடிகள் அனைத்தும் மாபெரும் ஹிட் ஆயின என்றாலும் அதனை நான் பார்க்கும் பொழுது என்னுடைய அம்மா ஞாபகம் தான் எனக்கு வரும் என்று மனம் நெகிழ்ந்து அந்த நேர்காணலில் கூறியிருந்தார்.மேலும் வடிவேல் ஒரு காமெடி நடிகர் மட்டுமல்ல அவர் ஒரு காமெடி விஞ்ஞானி என்று கூறியிருந்தார். அவரைப் போன்று ஒரு காமெடி நடிகர் இனி தமிழ் சினிமாவிற்கு கிடைப்பது அபூர்வம்.
இப்படி மாரிமுத்து அவர்கள் தன்னுடைய கடந்த கால மலரும் நினைவுகளை எல்லாம் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.
இதையும் படிங்க- விஜய் வரவே மாட்டேனு சொல்லிட்டாரு! வடிவேலு பட இசைவெளியீட்டு விழாவில் நடந்த களேபரம்
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…