5 கெட்டப்புல கலக்கப் போகும் வடிவேலு... டைரக்டர் அவரா...? அப்போ சூப்பர்ஹிட் தான்!
காமெடியில் சரவெடியாய் வெடித்து ரசிகர்களைக் குதூகலப்படுத்துபவர் வைகைப்புயல் வடிவேலு தான். ஆனால் அவருக்கு என்ன நேரமோ தெரியல. நல்லா பீக்ல இருக்கும்போது சில பல காரணங்களால் படவாய்ப்பு குறைந்தது. அது அவருக்கு பெரிய கேப்பைத் தந்தது. மீண்டும் அவருக்கு பழைய படங்களைப் போல காமெடி எடுபடவில்லை.
இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் 2ம் பாகமும் சில காரணங்களால் நின்று போனது. பொதுவாக வடிவேலு படங்களின் எந்த ஒரு காமெடியும் அவரது டயலாக்கும் இன்று வரை பல சம்பவங்களுக்குப் பொருந்தி போகவே அது மீம்ஸ்களில் ட்ரெண்ட்டாகி விடுகிறது. அதனால் அவரை மீம்ஸ் கிரியேட்டர்னே சொல்வாங்க.
Also read: தக் லைஃப் கையில் தான் இந்தியன் 3ன் ரிலீஸ்… இது செம கிளாஷா இருக்கே..!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருக்கு வித்தியாசமான கெட்டப்பில் வெளியான மாமன்னன் படம் ஓரளவு வரவேற்பைக் கொடுத்தது. ஆனால் காமெடியில் அவருக்கு இன்னும் பேர் சொல்லும் படங்கள் வரவில்லை. அந்தக் குறையைப் போக்குமா சுந்தர்.சி. - வடிவேலு கூட்டணி என்று பார்ப்போம்.
15 வருஷத்துக்கு அப்புறமா சுந்தர்.சி.யும் வடிவேலுவும் மீண்டும் இணையறாங்க. கேங்கர்ஸ் தான் அந்தப் படம். தென்காசி பக்கத்துல தான் பெரும்பாலான சூட்டிங்கும் நடந்தது. சென்னையில எல்லாம் எடுத்துருக்காங்க. மொத்த படமும் முடிஞ்சிடுச்சாம். கேத்தரின் தெரசா தான் ஹீரோயின். வாணி போஜன் தான் இன்னொரு ஹீரோயின்.
படத்துக்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தான் பாக்கி. படத்தை டிசம்பர் அல்லது பொங்கலுக்கு ரிலீஸ் செய்யலாம் என திட்டமிட்டுள்ளார்களாம். சுந்தர்.சி.யைப் பொருத்தவரை பொங்கலுக்குத் தான் அவருக்கு எப்பவுமே ஒரு கண்ணு இருக்கும்.
அரண்மனை 4 படத்தைக்கூட அந்த நேரத்தில் தான் விடணும்னு ஆசைப்பட்டாரு. அவரது படத்திற்கு என்று தனி ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால் படத்தை எப்படியும் வெற்றி பெறச் செய்திடுவார்.
2006ம் ஆண்டு தலைநகரம் படத்தில் வடிவேலுவுடன் சுந்தர்.சி. இணைந்து நடித்தார். சுராஜ் இயக்கிய இந்தப் படத்திற்கு டி.இமான் இசை அமைத்து இருந்தார். படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் வடிவேலு - சுந்தர்.சி. காம்போ காமெடிகள் சரவெடியாய் இருந்தது. மேற்கண்ட தகவலை வலைப்பேச்சு குழுவினர் தெரிவித்துள்ளனர்.