இந்த மாதிரிலாம் பண்ணாத- விவேக்கிற்கு ஃபோன் போட்டு திட்டிய வடிவேலு…
வடிவேலுவும் விவேக்கும் போட்டி போட்டு நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்திலும் இருவரும் சேர்ந்து பல திரைப்படங்களில் காமெடியில் கலக்கினார்கள். “நந்தவனத் தேரு”, “மைனர் மாப்பிள்ளை”, “விரலுக்கேத்த வீக்கம்”, “உன்னருகே நானிருந்தால்”, “லூட்டி” உட்பட பல திரைப்படங்களில் இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள்.
இந்த நிலையில் பிரபல காமெடி நடிகரான கொட்டாச்சி, வடிவேலு குறித்த ஒரு தகவலை தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது “பெண்ணின் மனதை தொட்டு” திரைப்படத்தில் விவேக்குடன் இணைந்து கொட்டாச்சி மிகச் சிறப்பாக நடித்திருந்தார். இதனை தொடர்ந்து வடிவேலு ஒரு நாள் விவேக்கிற்கு தொலைப்பேசியில் அழைத்து, “என்ன வரவன் போறவனை எல்லாம் நீ வளத்துவிட்டுட்டு இருக்க, என்ன இப்படிலாம் பண்ணிட்டு இருக்க?” என கேட்டாராம்.
அதற்கு விவேக், “யாருப்பா வளர்த்துவிடுறா. அவங்களுக்குன்னு ஒரு திறமை இருக்கு. அதாவது அவனுக்கு சினிமாலதான் சோறு கிடைக்கும்ன்னு எழுதிருந்தா, அதை நாம தடுக்க முடியாது. பாவம் அவுங்களாம் ரொம்ப கஷ்டப்படுறாய்ங்க” என கூறினாராம்.
மேலும் “பெண்ணின் மனதை தொட்டு” திரைப்படத்தில் பல காமெடி காட்சிகளை அத்திரைப்படத்தின் இயக்குனர் நீக்கிவிட்டாராம். முழுக்க முழுக்க எமோஷனலாக கொண்டு போகலாம் என நினைத்து படமெடுத்தால், காமெடி காட்சிகளால் படம் நிறைந்துவிட்டதாக இயக்குனர் கூறினாராம்.