சந்திரமுகி 2 படத்திலும் வடிவேலுவின் அட்ராசிட்டி!.. ரெடியா இருங்க மக்களே!...

பி.வாசுவின் இயக்கத்தில் ரஜினி நடித்து 2005ம் வருடம் வெளியான திரைப்படம் சந்திரமுகி. இப்படத்தில் ஜோதிகா, பிரபு, நாசர், வடிவேலு என பலரும் நடித்திருந்தனர். மலையாளத்தில் வெளியான ‘மணிச்சித்திரத்தாழ்’ படத்தின் கதையை அடிப்படையாக வைத்து கன்னடத்தில் ஆப்தமித்ரா என்கிற தலைப்பில் பி.வாசு ஒரு படத்தை இயக்கினார். அந்த படம் சூப்பர் ஹிட். அந்த படத்தை பார்த்த ரஜினி தமிழில் எடுக்க ஆசைப்பட்டார். அப்படி உருவான திரைப்படம்தான் சந்திரமுகி.
இப்படம் ரஜினிக்கு ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. 50 நாட்கள் தாண்டியும் தியேட்டர்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது. இப்படத்திற்கு பெரிய பலமாக வடிவேலுவின் காமெடியும் அமைந்தது. ரஜினி - வடிவேலு காமெடி ரசிகர்களுக்கு புதிதாக இருந்ததோடு, ரசிக்கவும் வைத்தது.
அதன்பின் சந்திரமுகி 2 எடுக்க பி.வாசு திட்டமிட்டார். ஆனால், ஏனோ சில காரணங்களால் ரஜினி இப்படத்தில் நடிக்கவில்லை. எனவே, ராகவா லாரன்ஸ் இப்படத்தில் நடித்தார். இப்படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், மஹிமா நம்பியார், லட்சுமி மேனன், ராதிகா என பலரும் நடித்துள்ளனர். படம் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் வினாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு பாகுபலி மற்றும் ஆர்.ஆர்.ஆர். ஆகிய படங்களில் இசையமைத்த கீரவாணி இசையமைத்துள்ளார். இவரின் இசை படத்திற்கு பெரிய பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலயில், சந்திரமுகி முதல் பாகத்தை போலவே சந்திரமுகி 2 படத்திலும் வடிவேலுவின் காமெடி சரவெடியாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இவரின் காமெடியும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கும் என நம்பப்படுகிறது. சமீபத்தில் முழு படத்தையும் பி.வாசு, ராகவா லாரன்ஸ், வடிவேலு மற்றும் லைக்கா ஆகியோர் பார்த்துள்ளனர். படம் சிறப்பாக வந்துள்ளதில் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களாம்.
இதையும் படிங்க: 10 பெண்கள்!.. பலான விஷயத்தில் சிக்கிய ஜெயிலர் வில்லன்!.. யார் இந்த விநாயகன்?..