ஷூட்டிங்கிற்கு வராமல் ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்த வடிவேலு… ஃபிளாப் கொடுத்தும் அடங்கலயே!..

vadivelu
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வடிவேலு “இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி” திரைப்படத்தில் ஒப்பந்தமானார். அத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் வடிவேலு சரியான ஒத்துழைப்பு தராத காரணத்தால் தனக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக அத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான ஷங்கர், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார்.

Vadivelu
அப்புகாரின் அடிப்படையில் வடிவேலுவுக்கு சினிமாவில் நடிக்க ரெட் கார்டு போடப்பட்டது. அதன் பின் கடந்த 2021 ஆம் ஆண்டு வடிவேலு மீதான தடை நீங்கியது. அதனை தொடர்ந்து “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்”, “மாமன்னன்”, “சந்திரமுகி 2” ஆகிய திரைப்படங்களில் வடிவேலு ஒப்பந்தமானார்.
இதில் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” திரைப்படம் கடந்த ஆண்டு வெளிவந்து படுதோல்வியடைந்தது. அதனை தொடர்ந்து “மாமன்னன்” திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது. மேலும் தற்போது “சந்திரமுகி 2” திரைப்படத்தில் வடிவேலு நடித்து வருகிறார்.

Vadivelu
இந்த நிலையில் வடிவேலு , “சந்திரமுகி 2” திரைப்படத்திற்காக சரியாக ஒத்துழைப்பு தர மறுக்கிறார் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது காலை 9 மணிக்கு படப்பிடிப்பிற்கு வரச்சொன்னால் “10 மணிக்கு வரலாமா?” என்று கேட்கிறாராம். “இல்லை சார், முக்கியமான காட்சி” என்று கூறினால், “அப்படியா? அப்போ ஒரு 11 மணிக்கு வந்துரவா?” என கேட்கிறாராம்.
இதை கேட்டு ஷாக் ஆகும் உதவி இயக்குனர்கள், “சரி சார், 11 மணிக்கு வந்துடுங்க” என ஒப்புக்கொண்டாலும் படப்பிடிப்பிற்கு 11.30 மணிக்குத்தான் வருகிறாராம். அதுமட்டுமல்லாது 11.30 வரை அவரது செல்ஃபோன் ஸ்விட்ச் ஆஃபில்தான் இருக்குமாம். அவரை 11.30க்கு முன் தொடர்புகொள்ளவே முடியாதாம். ஆதலால் உதவி இயக்குனர்கள் பல நாட்கள் பதற்றத்தோடே இருப்பார்களாம். இதைப்பார்த்து ஃபிளாப் கொடுத்தும் வடிவேலு திருந்தவில்லை என படப்பிடிப்பில் பேச துவங்கியுள்ளனராம்.

vadivelu
“சந்திரமுகி 2” திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ், ராதிகா சரத்குமார், வடிவேலு, கங்கனா ரனாவத் ஆகியோர் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தை பி.வாசு இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குக் வித் கோமாளியில் இருந்து விரட்டப்பட்டவருக்கு அடைக்கலம் தந்த விஷால்… என்ன மனுஷன்யா!!