Cinema News
அடிச்சிக்கூட கேட்பாங்க அப்பவும் சொல்லிடாதீங்க- இந்த காமெடி காட்சிக்கு பின்னால் இப்படி ஒரு சோக கதை இருக்கா?
வடிவேலுவின் காமெடி காட்சிகளில் பயன்படுத்தப்பட்ட வசனங்கள் இன்று இணையத்தில் மீம் மெட்டிரியலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மிகவும் பிரபலமான வசனங்களில் ஒன்றுதான் “அடிச்சிக்கூட கேட்பாங்க அப்பவும் சொல்லிடாதீங்க” என்ற வசனம்.
இந்த காமெடி காட்சி “கண்ணும் கண்ணும்” என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சி ஆகும். இந்த காமெடி காட்சியில் போலீஸிடம் தப்பித்து தண்ணீருக்கடியில் ஒளிந்திருக்கும் போண்டா மணி, திடீரென வெளியே வருவார். இதனை பார்த்த வடிவேலு அரண்டுவிடுவார். அப்போது போண்டா மணி, “என்னைய போலீஸ் தேடிட்டு இருக்கு. அவங்க வந்து கேட்பாங்க, எதுவும் சொல்லிடாதீங்க, அடிச்சிக்கூட கேட்பாங்க அப்பவும் சொல்லிடாதீங்க” என கூறிவிட்டு சென்றுவிடுவார். ஆனால் எதை கூறக்கூடாது என்பதை மட்டும் சொல்லமாட்டார்.
அதன் பின் போலீஸ் வந்து வடிவேலுவிடம் போண்டா மணி குறித்து விசாரிக்க, “அடிச்சிக்கூட கேட்பாங்க அப்பவும் சொல்லிடாதீங்க” என சொன்னதாக கூறுவார். வடிவேலுவை போலீஸ் பொளந்து கட்டிவிடுவார்கள். இந்த நகைச்சுவை காட்சியை இப்போது பார்த்தாலும் ரசிக்கும்படியாக இருக்கும்.
எனினும் இந்த காட்சிக்கு பின்னணியில் நடந்த சம்பவம் குறித்த தகவல் ஒன்றை சமீபத்திய பேட்டி ஒன்றில் போண்டா மணி பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது இந்த காட்சியில் அல்வா வாசுவைத்தான் நடிக்க வைக்க வேண்டும் என வடிவேலு கூறினாராம். ஆனால் இயக்குனர்தான் போண்டா மணி நடித்தால்தான் சிறப்பாக இருக்கும் என்று வாதிட்டாராம். இவ்வாறு இருவரும் வாக்குவாதம் நடத்த ஒரு வழியாக போண்டா மணியை நடிக்க வைப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளார் வடிவேலு. அவ்வாறுதான் இதில் போண்டா மணி நடித்துள்ளார்.