அவன்களாம் வரக்கூடாது!.. அந்த சாப்பாடெல்லாம் என்னால போடவே முடியாது!... கறார் காட்டிய வடிவேலு
Vadivelu: வடிவேலு தன் குடும்பத்தை தவிர மற்ற யாருக்குமே செய்ய மாட்டார் என்ற கூற்றுக்கு இன்னொரு உதாரணமும் தற்போது வெளியாகி இருக்கிறது. அதை கேட்கும்போதே இவருக்கு அப்படி என்னப்பா காசு ஆசைனு தான் பலருக்கும் தோணும்.
விஜயகாந்தின் கல்யாணம் மதுரையில் நடந்த கதை எல்லாருக்கும் தெரியும். ஆனால் அந்த நேரத்தில் மதுரையில் இருந்த எல்லா கல்யாண மண்டபங்களும் வாடகைக்கு எடுத்து இருக்கின்றனர். அவர் கல்யாணத்துக்காக அந்தந்த ஊர்காரர்களுக்கு விருந்து படைக்கப்பட்டதாம். அதே நாளில் மதுரையில் இன்னொரு கல்யாணமும் நடந்ததாம். அது தான் வடிவேலுவின் மகள் திருமணம்.
இதையும் படிங்க: நான் சாகுறதுதான் சரி!. பிரேமலதாவிடமே சொன்ன விஜயகாந்த்… இது எப்ப நடந்தது தெரியுமா?!..
ஊருக்கு செய்யாதவர் தன்னுடைய மகள்கள் மூவரையுமே சிஏ படிக்க வைத்தாராம். அவர் குடும்பத்தின் முதல் கல்யாணம் என்பதால் ரஜினி, கமல் போன்ற பிரபலங்களை அழைக்கலாம் என உறவினர்கள் கேட்டனராம். ஆனால் வடிவேலு அதெல்லாம் வேண்டாம். நான் கூப்பிட்டா அவங்களாம் வருவாங்க. ஆனா அவங்களுக்கு ரூம் போட்டு உபசரிக்கும் செலவை யார் செய்றது. அதுனால எந்த நடிகர்களும் வர வேண்டாம்.
நான் கூப்பிட மாட்டேன் என்றாராம். அதுசரி என உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டனர். திருமணத்துக்கு 2000 ஆயிரம் பேருக்கு சாப்பாடு சொல்லி இருக்கிறார். அதை போல சமையல்காரரும் அதிகமாக 400 பேருக்கு போட்டு மொத்த சாப்பாடும் முடிய போகிறது. ஆனால் வடிவேலு ரசிகர்கள் என 1500 பேர் சாப்பிட ரெடியாக நின்றனராம்.
இதையும் படிங்க: விஜயகாந்தை கடைசிவரை பார்க்க விடல!.. வசனகர்த்தா லியாகத் அலிகான் உருக்கம்…