கால் அமுக்கனுமா?? ஷூட்டிங்கில் இருந்து ஜகா வாங்கிய வடிவேலு… இப்படியெல்லாமா பண்ணுவாங்க??

by Arun Prasad |
கால் அமுக்கனுமா?? ஷூட்டிங்கில் இருந்து ஜகா வாங்கிய வடிவேலு… இப்படியெல்லாமா பண்ணுவாங்க??
X

வைகைப்புயல் வடிவேலு, ரஜினி, கமல், விஜய், அஜித் என தமிழின் டாப் நடிகர்களுடன் இணைந்து காமெடியில் கலக்கியுள்ளார். எனினும் தனுஷுடன் ஒரு திரைப்படத்தில் கூட நடித்ததில்லை. ஆனால் அப்படி ஒரு சம்பவமும் நடந்தது.

கடந்த 2009 ஆம் ஆண்டு தனுஷ், தமன்னா, விவேக், சுமன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்து மாஸ் ஹிட் ஆன திரைப்படம் “படிக்காதவன்”. இத்திரைப்படத்தின் வெற்றிக்கு பெரும் பங்கு வகித்தது விவேக்கின் காமெடி. “அசால்ட் ஆறுமுகம்” என்ற கதாப்பாத்திரத்தில் விவேக், ஒரு காமெடி கேங்கஸ்டராக நகைச்சுவையில் வெளுத்துவாங்கியிருந்தார்.

ஆனால் “படிக்காதவன்” திரைப்படத்தில் முதலில் காமெடி ரோலில் நடித்தது வடிவேலுதான். சில காரணங்களால் அவர் அத்திரைப்படத்தில் இருந்து வெளியேறிவிட்டார். தனுஷும் வடிவேலுவும் இடம்பெறும் காட்சிகள் சிலவும் எடுக்கப்பட்டது. இந்த படப்பிடிப்பின்போது நடந்த ஒரு சம்பவத்தை மீசை ராஜேந்திரன் ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார்.

அதாவது “படிக்காதவன்” திரைப்படத்தில் நடிகர் சுமனுக்கு கால் அமுக்குவது போல் ஒரு காட்சி இருந்திருக்கிறது. இது ஒரு அட்டகாசமான காமெடி காட்சி என்பது படம் பார்த்த அனைவருக்கும் தெரிந்திருக்கும். விவேக் இந்த காட்சியில் சிறப்பாக நடித்திருப்பார்.

இந்த நிலையில் வடிவேலு இத்திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது இந்த காட்சியை படமாக்கியிருக்கிறார்கள். அப்போது வடிவேலு “நான் தமிழ்நாட்டின் மிகப்பெரிய காமெடி நடிகர். நான் யாருக்கும் கால் அமுக்குவது போல் நடிக்கமாட்டேன்” என கூறி அந்த காட்சியில் நடிக்க மறுத்திருக்கிறார். படக்குழுவினர் அவரை ஒப்புக்கொள்ளவைக்க முயன்றும் அவர் நடிக்கவில்லை. அதன் பின் வடிவேலு ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டு கிளம்பிவிட்டாராம்.

இது போன்ற மற்றொரு சம்பவத்தையும் மீசை ராஜேந்திரன் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். “படிக்காதவன்” திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ஒரு நாள் வடிவேலு, இயக்குனர் சொல்வது போல் சரியாக நடிக்கவில்லையாம். இதனை கவனித்த தனுஷ், வடிவேலுவிடம் “இயக்குனர் சொல்வது போல் நடிங்க” என கூறியிருக்கிறார். இதனால் வடிவேலு கோபம் கொண்டாராம். அந்த நாள் படப்பிடிப்பு முடிந்தபிறகு “சந்திரமுகியில் தனுஷின் மாமனாருக்கே நான் தான் நடிப்பு சொல்லிகொடுத்தேன். இவர் என் கிட்ட எப்படி நடிக்கனும்ன்னு சொல்றாரு பாரு” என கூறினாராம்.

Next Story