அவனுங்களுக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்காதீங்க!.. தயாரிப்பாளரிடம் சில்ற புத்தியை காட்டிய வடிவேலு!..
Actor vadivelu: திரையில் காமெடி செய்து ரசிக்க வைக்கும் வடிவேலுவைத்தான் ரசிகர்களுக்கு தெரியும். ஆனால், நிஜவாழ்வில் தலைக்கணம் பிடித்த, யாரையும் வளர விடாத, பொறாமை குணம் கொண்ட, வன்மம் கொண்ட வடிவேலுவை திரையுலகினருக்கு மட்டுமே தெரியும். அவரை வைத்து படமெடுத்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் உடன் நடித்த காமெடி நடிகர்களுக்குதான் வடிவேலுவின் நிஜ குணம் தெரியும்.
அது ரசிகர்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும். வடிவேலு இப்படிப்பட்டவரா என அதிர்ச்சியே கொடுக்கும். அவரை பற்றி அவருடன் நடித்த பல காமெடி நடிகர்களும் ஊடகங்களில் கொடுத்த பேட்டியை பார்த்தால் அது உங்களுக்கு புரியும். வடிவேலு பீக்கில் இருந்தபோது தினமும் 10 லட்சம் சம்பளம் வாங்கினார்.
இதையும் படிங்க: வேற மொழிப்படங்களா?.. நோ நோ.. தமிழ்ப்படங்களில் மட்டுமே கெத்து காட்டிய நடிகர்கள்…
அதுவும் அவர் நினைக்கும் நேரத்திற்குதான் படப்பிடிப்புக்கு வந்து ஒரு நாளைக்கு 2 காட்சிகளில் மட்டுமே நடிப்பார். இப்படி பல தயாரிப்பாளர்களை கதறவிடுவார். அல்வா வாசு, பெஞ்சமின், முத்துக்காளை, சிங்கமுத்து, போண்டா மணி என பலரும் இவருடன் நடிப்பார்கள். வடிவேலுவுடன் நடிப்பதற்காக மணிக்கணக்கில் அவர்கள் தினமும் பல மணி நேரங்கள் அவரின் அலுவகத்தில் காத்திருப்பார்களாம். யார் கீழே உட்காராமல் நின்று கொண்டே இருக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே வடிவேலு வாய்ப்பு கொடுப்பாராம். அப்படி ஒரு சேடிஸ்தான் வடிவேலு என்பது ரசிகர்களுக்கு தெரியாது.
ஒருமுறை வடிவேல் நடித்த ஒரு படத்தை ஒரு புது தயாரிப்பாளர் தயாரித்துள்ளார். பொதுவாக வடிவேலுவுடன் நடிக்கும் சின்ன சின்ன நடிகர்களுக்கு 2 ஆயிரம், 3 ஆயிரம் இப்படி மட்டுமே சம்பளம் கொடுப்பார்கள். ஆனால், அந்த தயாரிப்பளர் அவர்கள் மீது இரக்கப்பட்டு எல்லோருக்கும் 20 ஆயிரம் கொடுங்கள் என சொல்லிவிட்டாராம்.
இதையும் படிங்க: மக்கள் துடிக்கிறாங்க!… பிரேமலதா குடும்பம் பார்க்காம விட்டுச்சா? விஜயகாந்த் குடும்பம் உடைத்த உண்மை!
இதைக்கேள்விப்பட்ட வடிவேலு அந்த தயாரிப்பாளரை அழைத்து ‘எதுக்காக அவனுங்களுக்கு 20 ஆயிரம் கொடுக்குறீங்க. இன்னைக்கு நீங்க கொடுப்பீங்க. அதுக்கு அப்புறம் எல்லார்கிட்டையும் அவனுங்க அதையே கேட்பானுங்க. ஆளுக்கு 1500 கொடுங்க’ என சொல்லியிருக்கிறார்.
அதாவது, தன்னுடன் காமெடி காட்சிகளில் நடிக்கும் நடிகர்கள் வளர்ந்துவிடக்கூடாது என்பதில் வடிவேலு மிகவும் தெளிவாக இருப்பாராம். அப்படி வளர்ந்துவிட்டால் தன்னை மதிக்கமாட்டார்கள் என்பதுதான் அவரின் நினைப்பாக இருந்துள்ளது. அதனால்தான் கடந்த சில வருடங்களாகவே அவருடன் நடித்த நடிகர்கள் ஊடகங்களில் கொடுக்கும் பேட்டியில் அவரை கழுவி ஊற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திடீரென தனுஷ் படத்தை இயக்க இதான் காரணமாம்!.. அடங்க… நீங்க வெவரம் தானுங்கோ!