
Cinema News
மார்கெட்டை தக்க வைக்க இப்படியா?…பிள்ளைகளிடம் மோசமாக நடந்து கொண்ட வடிவேலு….
தமிழ் சினிமாவில் கவுண்டமணி, செந்தில் இவர்களுக்கு பின் நகைச்சுவையில் கொடிகட்டி பறந்தவர் வைகைபுயல் நடிகர் வடிவேலு. கவுண்டமணி காலத்திலயே அவர்களுடன் துணை நடிகராக நடித்து தன் நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தியவர். அதுமட்டுமில்லாமல் நடிகர் விஜயகாந்துடன் சின்னகவுண்டர் படத்தில் அவருக்கு குடை பிடிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
அப்போது வடிவேலுக்கு சம்பளம் 250 ரூபாயாம். இப்படி படிபடியாக வளர்ந்து இன்று அவரின் நகைச்சுவை இல்லாத
மீம்ஸ்களை சமூக வலைதளத்தில் காண முடியாது. எந்த ஒரு சூழ்நிலைக்கும் அவரின் நகைச்சுவை ரசிகர்களுக்கு பயன்பட்டு வருகிறது. இந்த நிலையில் வடிவேலுவை பற்றி அவருடன் நடித்தவரும் இப்போது அவருக்கு எதிராக நிற்பவருமாகிய நடிகர் சிங்கமுத்து சில தகவல்களை கூறினார்.
முதலில் இருவருமே சேர்ந்து நடித்து வந்தனர். சிலபல மனக்கசப்புகளால் இருவருக்கும் ஒரு பெரிட போரே நடந்து சண்டையில் முடிவடைந்திருக்கிறது. சினிமாவில் நடிக்க வருவதற்கு கல்யாணம் ஆகவில்லை. பிள்ளைகள் இல்லை என்றெல்லாம் சொல்ல சொல்லியிருக்கிறாராம் வடிவேலு. ஏனெனில் பிள்ளைகள் இருக்கிறது என்றால் நடிகைகள் நடிக்க வரமாட்டார்கள் என்று கூறுவார்களாம்.
ஒரு சமயம் மலேசியா சென்றிருந்த போது வடிவேலுவுக்கு நான்கு பிள்ளைகளாம். மலேசியா சென்ற போது அவரது மகனை உடன் அழைத்து சென்றாராம். அப்போது எல்லாரிடமும் இது என் அண்ணன் பிள்ளை என்று சொன்னாராம். இந்த வயதில் பிள்ளை இருக்கு என்று தெரிந்தால் மார்க்கெட் போய்விடும் என நினைத்து இப்படி கூறினாராம்.