“எனக்கு இப்போ ஒரு பாட்டு வேணும்”… ஷூட்டிங் முடிந்தும் அலப்பறையை கொடுத்த வடிவேலு… இப்படி பண்றீங்களேம்மா!!
தமிழ் சினிமாவின் நகைச்சுவை புயலாக திகழ்ந்து வரும் வடிவேலு, தற்போது “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் தற்போது “மாமன்னன்”, “சந்திரமுகி 2” போன்ற திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
“நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” திரைப்படத்தை சுராஜ் இயக்கியுள்ளார். இதில் வடிவேலுவுடன் குக் வித் கோமாளி சிவாங்கி, ரெடின் கிங்க்ஸ்லீ, பிக் பாஸ் ஷிவானி, ஆனந்த்ராஜ், முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தை சுராஜ் இயக்கியுள்ளர். இவர் இதற்கு முன் “தலைநகரம்”, “மருத மலை”, “படிக்காதவன்”, “கத்திச்சண்டை” போன்ற பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். “நாய் சேகர்” திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த நிலையில் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு வடிவேலு தனக்காக ஒரு பாடலை உருவாக்க வேண்டும் என கூறினாராம். இது குறித்து பத்திரிக்கையாளர் சி.சக்திவேல் தனது வலைப்பேச்சு வீடியோவில் பகிர்ந்துள்ளார்.
“நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் எல்லாம் முடிந்த பிறகு வடிவேலுக்கு ஒரு ஆசை வந்ததாம். அதாவது தனக்காக ஒரு புது பாடலை உருவாக்க வேண்டும் என படக்குழுவினரிடம் கூறினாராம்.
இதையும் படிங்க: “தமிழர்களை கேவலப்படுத்தாதீங்க”… ஹிந்தி படத்துக்கு சத்யராஜ் போட்ட கண்டிஷன்…
அதற்கு படக்குழுவினர் “படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. இப்போது வந்து ஒரு பாடல் வைக்கவேண்டும் என சொல்கிறீர்களே” என வடிவேலுவிடம் கேட்டார்களாம். அதற்கு வடிவேலு “எனக்கு பாடல் வைத்தே தீரவேண்டும்” என ஒற்றை காலில் நின்றாராம்.
வேறு வழியில்லாமல் படக்குழுவினர் ஒத்துக்கொண்டனராம். அதன் படி மும்பையில் இருந்து ஒரு நடன குழுவை வரவழைத்து பாடலை முடித்துவிட்டனராம். ஆனால் அந்த பாடல் படத்தின் கிளைமேக்ஸ் முடிந்து எழுத்துப் பாட்டாக வருகிறதாம். இந்த பாடலுக்காக அவர்கள் ஒன்றரை கோடி செலவழித்துள்ளார்கள் என கூறப்படுகிறது.