வேகமா போய் குத்தி நிறுத்துய்யா!.. காரை வைத்து கவுண்டமணியை வஞ்சம் தீர்த்த வடிவேலு!..
கவுண்டமணி பீக்கில் இருந்தபோது காமெடி காட்சிகளில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க வந்தவர்தான் வடிவேலு. அதுவும், ராஜ்கிரணால் வந்த வாய்ப்பு. என் ராசாவின் மனசிலே படத்தில் கவுண்டமணி வருவதற்கு நேரமானதால் வடிவேலுவை வைத்து சில காட்சிகளை எடுத்தார் ராஜ்கிரண்.
அதில், கவுண்டமணிக்கு விருப்பமில்லை என்றாலும் அவர்தான் தயாரிப்பாளர் என்பதால் ஒன்றும் செய்யமுடியவில்லை. ஒரு காட்சியில் ‘நல்லா இருக்கீங்களாண்ணே’ என வடிவேலு கேட்க, ‘நான் என்ன ஹாஸ்பிட்டல்ல இருந்தா வரேன்’ என சொல்லி அவரை கீழே போட்டு மிதி மிதி என மிதிப்பார் கவுண்டமணி. அது கோபத்தில் உண்மையிலேயே கூட அவர் செய்திருப்பார்.
இதையும் படிங்க: பாட்ஷா படத்துல ரஜினி ஆட்டோ டிரைவரா நடிக்க காரணமே வடிவேலுதான்!.. என்னப்பா சொல்றீங்க!..
அதன்பின் சிங்காரவேலன் படத்திலும் கவுண்டமணியிடம் திட்டும், அடியும் வாங்கும் வேடத்தில் வடிவேலு நடித்திருந்தார். சின்னக்கவுண்டர் படத்தில் வடிவேலு வாய்ப்பு கேட்டபோது மறுத்துவிட்டார் கவுண்டமணி. அதன்பின் விஜயகாந்த் அவருக்கு வாய்ப்பு கொடுத்தார். கோவில்காளை படத்திலும் செந்திலின் நண்பராக நடித்திருப்பார். அந்த படத்திலும் கவுண்டமணியிடம் அடி வாங்குவார். இப்படித்தான் சினிமாவில் வளர்ந்தார் வடிவேலு.
அதன்பின் மெல்ல மெல்ல மற்ற படங்களில் நடிக்க துவங்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் வடிவேலு. அவர் திரைப்படங்களில் பேசும் மதுரை பாஷை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. வைகைப்புயல் என்கிற அடைமொழியும் கிடைத்தது. சினிமாவில் ரசிகர்களை சிரிக்க வைத்தாலும் நிஜவாழ்வில் வடிவேலு வேறு மாதிரி குணம் கொண்டவர். யாருக்கும் உதவி செய்யமாட்டார்.
அதிக வன்மமும் கொண்டவர்.
இதையும் படிங்க: ஆரம்பிச்சா தாங்க மாட்டீங்க! அடக்கி இருக்கிறவனை வெடிக்க வச்சிராதீங்க.. என்னாச்சு வடிவேலுவுக்கு?
குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை அலசி படமெடுக்கும் வி.சேகரின் நிறைய படங்களில் கவுண்டமணி நடித்திருக்கிறார். அப்படி உருவான ‘வரவு எட்டணா செலவு பத்தனா’ படத்தில் கவுண்டமணியுடன், வடிவேலுவும் நடித்திருப்பார். இந்த படத்தில் நடிக்கும்போது வடிவேலு ஒரு காரை வாங்கி இருக்கிறார். அதில், வி.சேகரையும் ஏற்றிகொண்டு சென்றிருக்கிறார்.
ஒரு இடத்தில் கவுண்டமணி மற்றும் செந்திலின் கார்கள் நிற்பதை பார்த்த வடிவேலு ‘கவுண்டமணி கார்ல மோதுற மாதிரி வேகமா போய் குத்தி நிறுத்தியா’ என சொல்லி இருக்கிறார். டிரைவரும் அப்படியே ஓட்ட கவுண்டமணி கார் டிரைவர் பயந்து போய் தெறித்து ஓடியிருக்கிறார். ’இவனையெல்லாம் வைக்க வேண்டிய இடத்துல வைக்கணும். வாய்ப்பு கொடுத்து தூக்கிவிட்டா இப்படித்தான் செய்வான்’ என கமெண்ட் அடித்தாராம் கவுண்டமணி.