ராஜ்கிரணின் உதவியால் என் ராசாசிவின் மனசிலே திரைப்படத்தில் அறிமுகமானவர் வடிவேலு. அதன்பின் தேவர் மகன், சின்ன கவுண்டர், சிங்கரா வேலன் ஆகிய படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். கவுண்டமணிக்கு இவரை பிடிக்கவே பிடிக்காது. எனவே, இவருடன் நடிக்கும்போது இவரை கீழே தள்ளி எட்டி உதைத்துகொண்டே இருப்பார்.
ஆனால், அதே வடிவேலு பின்னாளில் கவுண்டணி ரேஞ்சுக்கு முன்னணி நகைச்சுவை நடிகராக பல படங்களில் நடித்தார். வைகைப்புயல் என்கிற பட்டப்பெயரும் அவருக்கு கிடைத்தது. பெரும்பாலும் கிராமப்புற கதைகளில் அதிகம் நடித்தார். ரசிகர்களை சிரிக்க வைக்கும் அளவுக்கு நல்ல திறமையான நடிகராக இருந்தாலும் அவரின் மறுபக்கம் பலருக்கும் தெரியாது.
இதையும் படிங்க: வடிவேலு சரியான ஆளுங்க… குத்தமா சொல்லல… சும்மா சொல்லணும்னு தோணிச்சு… பகீர் கிளப்பிய பயில்வான்
குறிப்பாக ரசிகர்களுக்கு வடிவேலுவின் நிஜமான குணத்தை பற்றி தெரியவே தெரியாது. கவுண்டமணி ஸ்டைலில் ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பளம் வேண்டும் என கேட்டார். ஆனால், காலை தாமதமாகத்தான் படப்பிடிப்புக்கு வருவார். ஒரு காட்சியில் நடித்துவிட்டு கேரவேணுக்கு போய்விடுவார். மதியம் சாப்பிட்டுவிட்டு வந்து இரண்டு காட்சிகள் நடிப்பார். வீட்டிற்கு போய்விடுவார். பாதிபடத்தில் நடித்திவிட்டு திடீரென சம்பளத்தை 2 மடங்கு சேர்த்து கேட்பார். பணத்தை கொடுக்கவில்லை எனில் டப்பிங் பேசமாட்டேன் என அடம்பிடிப்பார்.
இப்படி பல இயக்குனர்களையும், தயாரிப்பாளர்களையும் கதற விட்டவர்தான் வடிவேலு. பல காமெடி நடிகர்களை வைத்து பல வெற்றிப்படங்களை கொடுத்த சுந்தர் சி-யையே கதறவிட்டு நெஞ்சுவலி வர வைத்தவர்தான் வடிவேலு. அவரை விட்டால் வேறு வழியில்லை என்பதால் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும், அவரை பொறுத்துக்கொண்டனர்.
இதையும் படிங்க: இனிமே என் காட்டுல மழை தான்… ஓவர் பில்டப் கொடுக்கும் வடிவேலு! இதே உருட்டதான முன்னவும் போட்டீங்க!
அதுமட்டமல்ல.. இயக்குனர் ஒரு வசனம் சொன்னால் வடிவேலு ஒன்று பேசுவார்.. சில இயக்குனர்களை மதிக்கவே மாட்டார். காட்சியை மாற்ற சொல்லுவார். இதனால்தான் இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் பஞ்சாயத்து ஏற்பட்டு 4 வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்தார்.
ஆனால், இப்போதும் அவரின் அலப்பறை அடங்கவில்லை. மாமனிதன் திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. இதைத்தொடர்ந்து ரூ.5 கோடி சம்பளம் கொடுத்தால் மட்டுமே நடிப்பேன் என சொல்கிறாராம். இதைக்கேட்டு தயாரிப்பாளர்கள் தலை தெறிக்க ஓடுகிறார்கள்.
இதையும் படிங்க: வடிவேலுயை நம்பி களமிறங்கும் சந்திரமுகி 2… மியூசிக்கில் கூட சொதப்பினாரா கீரவாணி… என்னங்க இப்படி!
Rj balaji…
விமர்சனம் செய்வது…
விஜய் அக்டோபர்…
கார்த்திக் சுப்புராஜ்…
Surya: நடிகர்…