தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த காமெடி நடிகரான வடிவேலு கிட்டத்தட்ட எந்த ஹீரோக்களின் படங்கள் வெளியானாலும் அதில் நிச்சயம் அவர் நடிக்கும் அளவுக்கு மிகச்சிறந்த காமெடி நடிகராக வலம் வந்தார். மதுரையை சேர்ந்த இவர் 1988 இல் டி.ராஜேந்தர் இயக்கிய என் தங்கை கல்யாணி என்ற திரைப்படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார்.
அறிமுகமான மிக குறுகிய வருடத்தில் தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து மிகப்பெரிய ஹீரோ ரேஞ்சுக்கு வளர்ந்தார். அது தான் அவரின் தலைக்கனத்திற்கு காரணமாகவும் அமைந்தது. ஒரு கட்டத்தில் வடிவேலு மட்டும் தான் சிறந்த காமெடி நடிகர் என இயக்குனர்கள் எல்லோரும் தன் படத்திற்கு அழைத்ததால் தான் அவருக்கு திமிர் அதிகமானது.
இதனால் சக நடிகர்களை மதிப்பதில்லை. படப்பிடிப்பிற்கு நேரத்திற்கு வருவதில்லை. பொறுப்பாக நடிப்பதில்லை என அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தது. முன் பணம் வாங்கிவிட்டு படங்களில் நடிக்க மறுத்து ஆணவத்தில் ஆடியதால் அவருக்கு ரேட் கார்ட் போடப்பட்டது. அதன் பிறகு மிகப்பெரிய இடைவெளி விழுந்தது. பல ஆண்டுகளுக்கு பிறகு தான் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்தார்.
மேலும் எவ்வளவு பெரிய நடிகரின் படமாக இருந்தாலும் ஹீரோக்கள் வந்து வடிவேலுவுக்காக காத்து கிடப்பார்களாம். அவ்வளவு, ஏன் விஜய் கூட வடிவேலுவுக்காக செட்டில் பல மணி நேரம் காத்திருந்திருக்கிறாராம். ஆனால், வடிவேலு 10 மணிக்கு , 11 மணிக்கு கேஷுவலாக வந்து திமிராக நடந்துக்கொள்வாராம். இது ஒரு கட்டத்தில் எல்லோருக்கும் கோபத்தை ஏற்படுத்த கோலிவுகிட்டே சேர்ந்து தான் அவரை நிராகரித்ததாக பிரபல நடிகர் மீசை ராஜேந்திரன் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.
முன்பெல்லாம் சினிமா…
தமிழ் சினிமாவில்…
ஏஆர்.ரகுமான், சாய்ரா…
பிக்பாஸ் வீட்டில்…
Nepotism: பாலிவுட்டில்…