தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர்களில் மிக மிக முக்கியமானவர் நடிகர் வடிவேலு. தமிழில் சமூக வலைத்தளங்களில் துவங்கி, சினிமா, அரசியல் என அனைத்து விஷயங்களிலும் நடிகர் வடிவேலு இல்லாமல் இருக்க மாட்டார் அந்த அளவிற்கு மீம் கிரியேட்டர்களும் நெட்டிசன்களும் வடிவேலுவை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
தமிழில் முதன் முதலில் வடிவேலுவை ராஜ்கிரண்தான் அறிமுகப்படுத்தினார். அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து விட்டார் வடிவேலு. சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் பிரபலமான நகைச்சுவை நடிகர்களாக இருந்தவர்கள் கவுண்டமணியும் செந்திலும்தான், இருந்தாலும் அவர்களையும் மீறி தனக்கான இடத்தை பிடித்தார் வடிவேலு.
சினிமாவில் வடிவேலு வளர்ந்த பொழுது அப்போது வாய்ப்பு தேடி வந்த பல நடிகர்களை அவர் வளர்த்து விட்டார். போண்டா மணி, கிங் காங் போன்ற பல நடிகர்கள் அதில் அடக்கம். அதேபோல சினிமாவில் பெரிதாக வளர்ந்த பிறகு வடிவேலு குறித்து நிறைய சர்ச்சைகள் வெளியாகின.
அவர் தன்னுடன் நடிக்கும் நடிகர்களிடம் மோசமாக நடந்து கொள்வதாகவும் பேச்சுக்கள் இருந்தன. இது குறித்து பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் கூறும் பொழுது ”ஒரு படத்தில் வடிவேலு தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது அவரிடம் கொள்ளையடிப்பதற்காக கிங் காங் கயிறு கட்டி கீழே இறங்குவதாக ஒரு காட்சி இருக்கும்.
ஆர்டர் போட்ட வடிவேலு:
அந்த காட்சியை படமாக்கும் பொழுது கிங்காங் ஊரிலேயே இல்லை. அவர் வேறு ஏதோ படப்பிடிப்பிற்கு சென்று விட்டார். எனவே வேறு ஆளை வைத்து படத்தை எடுக்கலாம் என கூறியுள்ளனர். ஆனால் அதற்கு வடிவேலு ஒத்துக் கொள்ளவே இல்லை.
அவர் கிங்காங் இருந்தால்தான் இந்த படப்பிடிப்பு நடக்கும். எனவே அவரை அழைத்து வாருங்கள் என்று கூறியுள்ளார். எனவே படக்குழுவினர் விசாரித்த போது பாலிவுட்டில் ஷாருக்கானின் ஒரு படத்தில் நடிப்பதற்காக கிங் காங் அப்போது சென்றிருந்தார்.
இந்த விஷயத்தை அறிந்த வடிவேலு ஒரு வழியாக கிங் காங்கை தொடர்பு கொண்டு நீ வரவேண்டும், வந்தால் தான் இந்த காட்சியை எடுக்க முடியும் என அவரிடம் கூறியுள்ளார். உடனே அங்கிருந்து ஷூட்டிங்கை ஒத்தி வைத்துவிட்டு கிங்காங் ப்ளைட் பிடித்து வந்து இந்த படத்தில் நடித்து கொடுத்துள்ளார்.
அந்த அளவிற்கு தன்னுடன் வேலை பார்த்த சக ஊழியர்களுக்கு வாய்ப்பை வாங்கி கொடுக்க கூடியவர் வடிவேலு என்று கூறுகிறார் பத்திரிகையாளர் செய்யாறு பாலு.
இதையும் படிங்க: இதுக்குதான்யா புது டைரக்டருக்கு படம் பண்றது இல்ல! இயக்குனரால் கடுப்பான வாலி…
Rajinikanth: அபூர்வ…
தமிழ்த்திரை உலகில்…
நடிகை கீர்த்தி…
புஷ்பா 2…
நடிகர் கவின்…