தாங்க முடியாத அட்டகாசம்!.. நாய் சேகர் ரிட்டர்ன்ஸில் கமுக்கமாக வேலையை காட்டிய வடிவேலு!.. பாவம் அந்த நடிகர்!..
வடிவேலுவின் கெரியரில் ஒரு கம் பேக்கிற்கு அப்புறம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த படம் அது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் தான். சில காலங்களாகவே தமிழ் சினிமா வடிவேலுவின் கையில் தான் இருந்தது. அந்த அளவுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரையும் தன் பால் ஈர்த்து வைத்திருந்தார் வடிவேலு.
ஒரு சில பிரச்சினைகளால் சினிமாவில் ஒதுங்கியிருந்த வடிவேலு மீண்டும் கெத்தாக களமிறங்கிய படம் தான் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். இந்த படத்தில் நாய்களை திருடி விற்க்கும் ஒரு கதாபாத்திரத்தில் தான் வடிவேலு நடித்திருக்கிறார். கூடவே விஜய் டிவி புகழ் சிவாங்கி, நடிகர் ஆனந்த் ராஜ், நடிகர் ரெடின் கிங்ஸ்லி போன்ற முக்கிய நடிகர்களும் நடித்திருக்கின்றனர்.
இதையும் படிங்க :வாய்ப்பு கொடுத்தும் அடங்கலயே!.. சந்திரமுகி படத்தில் இருந்து விலகுகிறாரா வடிவேலு?…
ஏற்கெனவே காமெடியில் வடிவேலுவை ஒரு ராஜாவாக காட்டிய இயக்குனர் சுராஜ் தான் இந்த படத்தையும் இயக்கியிருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி புரோமோஷன் வரை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படக்குழு படத்தின் கதையில் கோட்டை விட்டது.
மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை தழுவியது. ஆனால் படத்தில் வடிவேலுவை விட அதிகம் ரசிக்க வைத்தவர் ஆனந்த் ராஜ் தான் என்று சொல்லப்படுகிறது. இன்னும் கொஞ்ச நேரம் ஆனந்த் ராஜை காட்டியிருக்கலாமோ என்றும் ரசிகர்களை கவலைப்பட வைத்திருக்கிறது.
இதையும் படிங்க : திடீரென கோயில் கோயிலாக சுற்றும் ரஜினி!.. அட இதுதான் காரணமா?…
ஆனால் உண்மையிலேயே ஆனந்த் ராஜின் காட்சிகள் படத்தில் பெருமளவு எடுத்திருக்கிறார்கள். இதை ஆனந்த்ராஜ் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார். முக்கால் வாசி காட்சிகளை எடிட்டிங்கில் பார்த்து வடிவேலு தான் தூக்க சொல்லியிருப்பதாக இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
சொல்லப்போனால் இந்த விஷயம் ஆனந்த்ராஜுக்கு கூட தெரியாதாம். ஆனந்த்ராஜ் நம்மை விட ஸ்கோர் செய்கிறார் என்ற பயத்தில் கூட வடிவேலு இப்படி செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. பாவம் ஆனந்த்ராஜ். ஏற்கெனவே பிகில் படத்திலும் இதே நிலை தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.