வடிவேலுக்கு எண்ட் கார்டு போட்டது ஜெயலலிதாவா?? உண்மையை உடைத்த மூத்த பத்திரிக்கையாளர்…
வைகைப்புயல் என்று போற்றப்படும் நகைச்சுவை நடிகர் வடிவேலு, தமிழ் மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் வாய் பேசவே தேவையில்லை, உடல் மொழியை பார்த்தாலே சிரிப்பு வரும். அந்த அளவுக்கு தனித்துவம் கொண்டு காமெடி உலகில் ராஜாவாக வலம் வந்தவர்.
வடிவேலு பல திரைப்படங்களில் விஜயகாந்த்துடன் இணைந்து நடித்துள்ளார். ஆனால் இடைப்பட்ட காலத்தில் அவருக்கும் விஜயகாந்திற்கும் விரிசல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 2011 ஆம் ஆண்டு தேர்தலில் விஜயகாந்த்திற்கு எதிராகவும், திமுகவுக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். திமுக அந்த தேர்தலில் தோல்வியடைந்த பிறகு வடிவேலு சில காலமாக சினிமாக்களில் தென்படவில்லை.
எனினும் வடிவேலு சினிமாக்களில் நடிக்காமல் போனதற்கு ஜெயலலிதாதான் காரணம் என பல வதந்திகள் பரவியது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த பத்திரிக்கையாளர் பிஸ்மி, ஒரு தகவலை பகிர்ந்துகொண்டார்.
அதில் “வடிவேலு படவாய்ப்பு ஏதும் இல்லாமல் பத்து வருடமாக வீட்டில் உட்கார்ந்திருந்தார். வடிவேலு மட்டும் தயாரிப்பாளர்களிடமும், இயக்குனர்களிடமும் நல்ல முறையில் நடந்துகொண்டிருந்தால் வடிவேலுவை இன்னும் 20 வருடங்கள் அசைத்திருக்கவே முடியாது.
ஆனால் பலரும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகுதான் வடிவேலுவுக்கு பட வாய்ப்புகள் வரவில்லை என கூறுகிறார்கள். இது தவறான கருத்து. ஜெயலலிதா ஆட்சிக்கு வருவதற்கு முன்பே வடிவேலுவுக்கு பட வாய்ப்புகள் இல்லை.
வடிவேலு சக நடிகர்களிடம் மோசமாக நடந்துகொண்டார். இயக்குனர்களையும் தயாரிப்பாளர்களையும் டார்ச்சர் செய்தார். இது போன்ற நடத்தைகளால்தான் வடிவேலுவின் சகாப்தம் முடிவுக்கு வந்தது” என பேசியுள்ளார்.