எனக்கு நேத்து நைட்டே விடிஞ்சிருச்சி சார்....!!! வடிவேலு நெகிழ்ந்த அந்த அற்புதமான தருணம்

by sankaran v |   ( Updated:2022-09-17 03:21:43  )
எனக்கு நேத்து நைட்டே விடிஞ்சிருச்சி சார்....!!! வடிவேலு நெகிழ்ந்த அந்த அற்புதமான தருணம்
X

நகைச்சுவை ஜாம்பவான்கள் தமிழ் சினிமாவில் எத்தனையோ பேர் இருந்தாலும் தற்போது படங்களில் நடிக்காத போதும் நடிகர் வடிவேலு இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகிறார். இதற்குக் காரணம் அவரது அசுரத்தனமான காமெடி சென்ஸ் தான். மனிதர் நின்றால்...நடந்தால்... சிரித்தால்... அழுதால்...என்ன செய்தாலும் அது காமெடியாகி விடுகிறது.

தற்போதைய மீம்ஸ்களின் நாயகன் யார் என்றால் அது வடிவேலு தான். இவர் பேசிய ஒவ்வொரு பேச்சும் எக்காலத்திற்கும் எவ்விடத்திற்கும் பொருந்தக்கூடியதாக உள்ளது என்றால் அது ஆச்சரியம் தான். இந்த பெருமைக்குரிய நடிகர் வடிவேலு சினிமாவுக்குள் நுழைந்தது சாதாரண விஷயமல்ல.

vadivelu 3

அதுவும் நடிக்க வந்த சில வருடங்களிலேயே கலைஞானியுடன் கைகோர்த்தது மட்டுமல்லாமல் செவாலியே சிவாஜியுடனும் இணைந்து நடித்து இருக்கிறார் என்றால் அது உண்மையிலேயே மகத்தான சாதனை தான். அப்பேர்ப்பட்ட வாய்ப்பு அவருக்கு எப்படி கிடைத்தது என்று தனக்கே உரித்தான நகைச்சுவையுடன் பேசினார்.

இந்த வாய்ப்பு அவருக்கு எப்போது கிடைத்தது என்றால் கமல் திரை உலகிற்கு வந்து 60 ஆண்டுகள் ஆனதையொட்டி தமிழ்த்திரை உலகமே சேர்ந்து விழா எடுக்கையில் தான் அந்த அருமையான வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா...

கமலை சந்திக்கக்கூடிய வாய்ப்பு எனக்கு சிங்காரவேலனில் கிடைத்தது. அஞ்சு வயசு. மன்னிச்சுக்கங்க. பிஞ்சு வயசுல எதுவுமே தெரியாம இந்தத் திரை உலகத்துல நுழைஞ்சிருக்கு. அம்மா அப்பாவக் கூட எப்படி கூப்பிடுறதுன்னு அழகான வாயால கூப்பிடுது. அம்மாவும் நீயே அப்பாவும் நீயே...அதை சொல்றப்ப எல்லாம் எங்க அம்மா அப்பா மேல மரியாதை இருக்குற மாதிரி சின்னப்பசங்களுக்கு எவ்வளவு பெரிய மனசு...! எல்லா வித்தையும் கத்து இங்க வந்து நிக்கறாரு.

vadivelu

இவரை மாதிரி ஒரு உதாரணமே கிடையாது. நான் ராஜ்கிரண் சார் மூலமா திரையுலகத்துக்கு வந்தேன். அடுத்து 2 படங்கள்ல அண்ணன் கமல் கூட நடிக்கக்கூடிய வாய்ப்பை ஆர்.வி.உதயகுமார் கொடுத்தாரு. முதல் படம் சிங்கார வேலன். அந்த படத்தில கமல் சார் கூட பேசுற வாய்ப்பு கிடைச்சது. என்னைப் பற்றி விசாரித்ததும் ராஜ்கமல் அலுவலகத்துக்கு வந்து பாருன்னு சொன்னாரு. சாயங்காலம் 6 மணிக்குப் போய் பார்த்தேன்.

Kamal, Vdivelu

5000 ரூபாய் அட்வான்ஸா செக் கொடுத்தாரு. மறுநாள் சிங்காரவேலன் சூட்டிங்கிற்காகப் போனேன். என்ன வடிவேலு காலைலதான உன்னைப் போகச் சொன்னேன். நைட்டே போயிட்ட போலருக்குன்னு கேட்டார். சார் எனக்கு நேத்து நைட்டே விடிஞ்சிட்டு சார்னு சொன்னேன். காலையில வர்ற விடியல் வேற. எனக்கு ராத்திரியே விடிஞ்சிட்டு சார்னு சொன்னேன்.

அதே மாதிரி இன்னைக்கும் இந்த மேடைல ஏறிருக்கேன். எனக்கு இது விடிவு காலம் தான் விடிஞ்சிருச்சி. அண்ணன் கமல் அவர்களுக்கு என்னோட மனமார்ந்த நன்றி. அடுத்து தேவர் மகன் படத்துல அண்ணன் கமல் செவாலியே சிவாஜி சாரோட சேர்ந்து நடிக்கக்கூடிய வாய்ப்பை எனக்குக் கொடுத்தாரு. அவரைப் போயி பார்த்தா கை கால் எல்லாம் வெட வெடங்குது.

Next Story