இதெல்லாம் ஒரு காட்சியா? நானெல்லாம் நடிக்க மாட்டேன் போயா? இயக்குனரிடம் எகிறிய வடிவேலு...
தமிழ் சினிமாவின் காமெடி நடிகர் வடிவேலுவின் ஹிட் காட்சி ஒன்றில் முதலில் நடிக்கவே மாட்டேன் என பிடிவாதம் பிடித்தாராம். அவரை சமாதானம் செய்த அந்த காட்சியில் நடிக்க வைத்ததாக சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.
1991 ஆம் ஆண்டு கஸ்தூரிராஜாவின் இயக்கத்தில், ராஜ்கிரண் தயாரித்து, கதாநாயகனாகவும் நடித்த ‘என் ராசாவின் மனசிலே’ என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து அந்த படத்தில் ‘போடா போடா புண்ணாக்கு’ என்ற பாடலையும் பாடி இருந்தார்.
அப்படத்தினை தொடர்ந்து, ஆர். வி. உதயகுமார் இயக்கத்தில் ‘சின்னகவுண்டர்’ என்ற படத்தில் கதாநாயகன் விஜயகாந்திற்கு குடை பிடிக்கிற பண்ணையாள் கதாபாத்திரத்தில் நடித்தார். இதை தொடர்ந்து இவருக்கு பல சினிமா வாய்ப்புகள் கிடைத்தது. ஆரம்ப காலக்கட்டத்தில் சின்ன கதாபாத்திரங்களிலே நடித்து வந்தார்.
2000 ஆம் ஆண்டு சேரனின் இயக்கத்தில் வெளிவந்த ‘வெற்றிக் கொடி கட்டு’ திரைப்படத்தில் பார்த்திபனுடன் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள், தமிழ் ரசிகர்களிடையே மாபெரும் கைத்தட்டலைப் பெற்றுத் தந்தது. அதனைத் தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு வெளிவந்த ப்ரண்ட்ஸ் திரைப்படம் அவருக்கு மேலும் புகழைத் தேடித்தந்தது.
இப்படங்களை போலவே கிரி படத்தில் இவர் நடித்த வீரபாகு கேரக்டரும் இன்றளவும் ரசிகர்களிடம் செம வரவேற்பை பெற்று இருந்தது. அதில் அவர் தனது பேக்கரிக்கு ஒரு பின்கதை சொல்லுவாரே அந்த அக்கா காமெடியை எடுக்க முதலில் வடிவேலு ஒப்புக்கொள்ளவே இல்லையாம். அன்றைய ஷூட்டிங்கின் போது மழையாக இருந்ததால் ஏதாவது வீட்டிற்குள் எடுக்கும் காட்சியை எடுக்கலாம் என யோசித்தனர்.
அப்போது உதித்தது தான் இந்த அக்கா காமெடியாம். ஆனால் அக்காவை வைத்தெல்லாம் தன்னால் காமெடி செய்யவே முடியாது என வடிவேலு மறுத்துவிட்டாராம். சுந்தர்.சி தான் எனக்கே 2 அக்கா இருக்கு. நானே சும்மா இருக்கேன். உனக்கு என்னப்பா.. காமெடி தானே. தவறா போச்சுனா டப்பிங்கில மாத்திக்கலாம் என சொல்லியே நடிக்க வைத்தாராம். ஆனால் அந்த காட்சிக்கு அங்கிருந்த படக்குழுவே செம ரெஸ்பான்ஸ் கொடுக்க அதை வைத்து பல காட்சிகளை டெவலப் செய்து விட்டாராம் சுந்தர். சி.