அறிமுகமான நாள் முதல் இப்போது வரை மக்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்து தமிழ் சினிமாவில் பெரும் நடிகராக இருந்து வருபவர் நடிகர் வடிவேலு. வைகைப்புயல் என அனைவராலும் அழைக்கப்படும் வடிவேலு தனது ஆரம்ப வாழ்க்கை முதலே நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.
திரைப்படங்களில் வரும் நகைச்சுவையை பேசுவது மட்டுமல்லாமல் உடல் மொழி மூலமாகவும் மக்களை சிரிக்க வைக்க தெரிந்தவராக வடிவேலு இருந்தார். அதனால்தான் கவுண்டமணி செந்தில் போன்ற பெரிய காமெடி நடிகர்களுடன் நடித்த போது கூட தன்னை தனியாக காண்பித்துக் கொள்ள வடிவேலுவால் முடிந்தது.
மதுரையைச் சேர்ந்த வடிவேலு சினிமாவுக்கு வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ராஜ்கிரண். ராஜ்கிரண் கொடுத்த வாய்ப்பின் மூலமாகதான் அவர் சினிமாவிற்கு வந்தார் என்பது பலகாலமாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் விஷயமாகும்.
ஆனால் இடையில் ஒரு பேட்டியில் வடிவேலு கூறும் பொழுது அதற்கு மாற்றான வேறு ஒரு விஷயத்தை கூறுகிறார். அதாவது ராஜ்கிரண் அவரை சினிமாவிற்கு அறிமுகப்படுத்துவதற்கு முன்பே சினிமாவின் மீது ஆர்வம் கொண்டு ஒரு படத்தில் நடித்துள்ளார் வடிவேலு. சினிமாவின் மீது இருந்த ஆர்வத்தின் காரணத்தினால் மதுரையிலிருந்து ஒருமுறை சென்னை ஏ.வி.எம் ஸ்டுடியோவிற்கு வந்திருக்கிறார் வடிவேலு.
அப்போது அங்கு உறவை காத்த கிளி திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அதை வேடிக்கை பார்க்க வடிவேலு சென்று இருந்தார். அப்போது அதில் சைக்கிள் ஓட்டும் ஒரு நபரின் கதாபாத்திரத்திற்கு ஆள் இல்லாததால் வடிவேலு அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்டு நடித்துள்ளார்.
அது திரைப்படத்திலும் வந்துள்ளது. அதன் பிறகு தான் வடிவேலுக்கு நடிப்பின் மீது ஆர்வம் வந்து திரும்பவும் வாய்ப்பு தேடி சென்னை சென்றுள்ளார் அப்பொழுது ராஜ் கிரணுடன் அவருக்கு பழக்கமாகி படங்களில் வாய்ப்புகளை பெற்றுள்ளார். எனவே ஆரம்பத்தில் அவர் சினிமாவிற்கு வருவதற்கு காரணமாக இருந்தவர் இயக்குனர் டி ஆர்தான் என அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 7 லட்சம் கொடு! படத்தை முடிச்சு தரேன் – தயாரிப்பாளரின் மனக்குமுறலுக்கு ஆளான எம்ஜிஆர்
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…