வடிவேலுவுடன் முதன்முதலாக இணையப்போகும் வெரைட்டி நடிகர்.. சும்மா கலக்கலா இருக்க போகுது!!
தமிழ் சினிமாவின் நகைச்சுவை மன்னனாகவும் வைகை புயலாகவும் திகழ்ந்து வரும் வடிவேலு, தற்போது “நாய் சேகர் ரிட்டன்ஸ்” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் விஜயகாந்திற்கு எதிராகவும் திமுகவுக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்து வந்த வடிவேலு, நடுவில் எந்த திரைப்படத்திலும் தலைக்காட்டவில்லை. அதன் பின் மெல்ல மெல்ல பல திரைப்படங்களில் காமெடியனாக நடித்து வந்தார். அதன் பின் “தெனாலி ராமன்”, “எலி” போன்ற திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால் எதுவும் கைக்கொடுக்கவில்லை.
அதன் பின் அனைவரும் எதிர்பார்த்த “இம்சை அசரன் 24 ஆம் புலிகேசி” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால் திடீரென படப்பிடிப்பு நின்றது. வடிவேலு சரியாக ஒத்துழைக்கவில்லை என பல தகவல்கள் வெளிவந்தன.
அதன் பின் சில படங்களில் காமெடியனாக நடித்து வந்த வடிவேலு தற்போது “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” படத்தில் நடித்து வருகிறார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் “மாமன்னன்” திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இவ்வாறு பல திரைப்படங்களில் நடித்து வரும் வடிவேலு இதுவரை சேர்ந்து நடிக்காத ஒரு நடிகருடன் இணைந்து கலக்க உள்ளார் என ஒரு தகவல் வெளிவருகிறது. அதாவது நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம்.
அத்திரைபடத்தில் காமெடி ரோலில் நடிக்கிறாரா? அல்லது குணச்சித்திர கதாப்பாத்திரத்தில் நடிக்கிறாரா? என்பது குறித்த தகவல் தெரியவில்லை. எனினும் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடிவேலு இதுவரை விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்ததில்லை. இந்த நிலையில் இருவரும் முதன்முதலாக இணைந்து நடிக்க உள்ள செய்தி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ் அறிவிப்பு வெளிவரும் வரை காத்திருக்கவேண்டியுள்ளது.